Vidaamuyarchi: சூர்யா எங்கே? விஜய்,ரஜினிக்கு வாழ்த்து.. அஜித்துக்கு மட்டும் சைலண்ட் மோட்? காரணம்?
சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் குறித்த பேச்சுகள் தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஓடிக்கொண்டு உள்ளது. படம் சூப்பர், படம் சுமார், படம் ஆவரேஜ், படம் தேறாது என என்னதான் விமர்சனங்கள் வந்தாலும், இந்த வார இறுதிக்குள் படம் பெரும் வசூலை குவித்து விடும் என்பது மட்டும் உறுதி. அப்படி இருக்கும்போது, அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்திற்காக சூர்யா வாழ்த்து கூறாதது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பல கேள்விகளையும் ஈர்த்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது. அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், படம் ரிலீஸ் ஆவதால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் படத்தை வரவேற்றுள்ளார்கள். இப்படி இருக்கும்போது, திரைத்துறையில் பலரும், படம் வெற்றி பெற அஜித்துக்கும் விடாமுயற்சி படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடிகர் சூர்யா கப்சிப் மோடில் உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆனது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட கங்குவா, எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. மாறாக படம் பெரும் தோல்வி படமாக மாறியது. அதை படக்குழு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர், தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நடிகர்கள் தொடங்கி, பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள பெரிய நடிகர்கள் வரை, அவர்கள் படங்கள் ரிலீஸ் ஆனால், தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்.
வாழ்த்தாத சூர்யா: குறிப்பாக விக்ரமின் தங்கலான், ரஜினிகாந்த்தின் வேட்டையன் படங்களுக்கு, படம் பெரும் வெற்றி பெற வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு, கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது வாழ்த்து கூறினார். ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு சூர்யா வாழ்த்து கூறவே இல்லை.
முன் பகை: விடாமுயற்சி படத்திற்கு மட்டும் இல்லாமல், அஜித் கார் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்ததற்கும் வாழ்த்து கூறவில்லை. அஜித்க்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் அஜித்துக்கு வாழ்த்து கூறவில்லை. எனவே சூர்யா ரஜினி, விஜய்க்கு எல்லாம் வாழ்த்துக் கூறுகிறார். ஆனால் அஜித்தின் படத்திற்கும் வாழ்த்து கூறுவதில்லை, அஜித் கார் ரேஸில் வென்றதற்கு வாழ்த்து கூறவில்லை, பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட போதும் வாழ்த்து கூறவில்லை. அதற்கு காரணம் என்ன? இருவருக்கும் இடையில், அதாவது அஜித்துக்கும் சூர்யாவுக்கும் இடையில் ஏதாவது, முன் பகை இருந்ததா எனவும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேருக்கு நேர்: கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான படம் நேருக்கு நேர். இந்தப் படத்தில் கமிட் ஆகி முதலில் நடித்தவர் அஜித். அதன் பின்னர் படத்தில் இருந்து சில காரணங்களால் அஜித் விலகினார். அதன் பின்னர் அஜித்தின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். அதன் பின்னர் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எல்லாம் பரஸ்பரமாக பேசி வந்தனர். ஆனால், விஜய், ரஜினிக்கு வாழ்த்திய சூர்யா, அஜித்க்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட சொல்லாமல் இருப்பது ஏன் என மில்லியன் டாலர் கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் கங்குவா படத்தின் தோல்வியால் சூர்யா மொத்தமாக சைலண்ட் மோடுக்கு மாறிவிட்டார். ரெட்ரோ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த பின்னர்தான், சூர்யா பழைய நிலைக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











