அமேசானுக்கு அம்பாசடர் ஆகிட்டாரா சூர்யா? ஜெய் பீம் உள்ளிட்ட 4 படங்களை ஒடிடிக்கு வித்துட்டாரு!

சென்னை: சூர்யாவின் நவரசா ஆந்தாலஜி இன்று நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அடுத்த அதிரடியாக அமேசான் பிரைமில் 4 நல்ல கதை வெளியாகப் போகுது என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூர்யா, அடுத்தடுத்து அதன் அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்.

சூரரைப் போற்று திரைப்படமே ஒடிடியில் வராது என முதலில் கூறிவிட்டு பின்னர் காலத்தின் கட்டாயம் என அமேசான் பிரைமில் வெளியிட்டார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஜெய் பீம் திரைப்படத்தையும் அமேசான் பிரைமுக்கே விற்றுள்ளார் சூர்யா.

ஜோதிகா ஆரம்பித்தது

ஜோதிகா ஆரம்பித்தது

ஜோதிகா வழக்கறிஞராக நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் தான் அமேசான் பிரைமில் முதன் முதலாக நேரடியாக வெளியான தமிழ்ப் படம். அந்த படத்தை ஒடிடியில் வெளியிடும் போதே கடும் எதிர்ப்புகளை நடிகர் சூர்யா சந்தித்தார். ஆனால், தனது சூரரைப் போற்று திரைப்படம் தியேட்டரில் வெளியாகி தியேட்டர் உரிமையாளர்களை காப்பாற்றும் என உறுதியளித்தார்.

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்கப் பட்ட போதிலும் சூரரைப் போற்று திரைப்படத்தை காலத்தின் கட்டாயம் கருதி அமேசான் பிரைமிலே வெளியிடுகிறேன் என அதிரடியாக அறிவித்து அந்த படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டு இருந்தார். சூர்யாவின் 2டி தயாரிப்பில் வெளியான அடுத்த படமும் ஒடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வசூல் வேட்டை

வசூல் வேட்டை

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமுக்கு ஏற்படுத்திக் கொடுக்காத லாபத்தை சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வேற லெவல் வசூல் வேட்டை ஆடி ஏற்படுத்திக் கொடுத்தது. நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமாவது திரையில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நெட்பிளிக்ஸையும் விடல

நெட்பிளிக்ஸையும் விடல

நல்ல வேளை சூர்யாவின் 2டி தயாரிப்பில் நவரசா ஆந்தாலஜி உருவாகவில்லை. அப்படி உருவாகி இருந்தால் அந்த படத்தையும் அமேசான் பிரைமுக்கே விற்று இருப்பார் நடிகர் சூர்யா. இந்த முறை மணிரத்னம் தயாரிப்பு என்பதால் நவரசா ஆந்தாலஜி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது. பல நடிகர்கள் நடித்திருந்தாலும், சூர்யாவை முன்னிலைப் படுத்தியே அனைத்து வியாபாரங்களும் நடைபெற்று வருகின்றன.

அமேசானில் 4 படங்கள்

அமேசானில் 4 படங்கள்

இந்நிலையில், நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ள ட்வீட்டில் அடுத்தடுத்து சூப்பரான 4 படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகப் போகிறது என சூர்யா பதிவிட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அமேசான் பிரைமின் ஆஸ்த்தான அம்பாசடராக மாறி விட்டாரா சூர்யா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஜெய் பீமும் அமேசானில்

ஜெய் பீமும் அமேசானில்

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படமும் ஒடிடி ரிலீசாகவே வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்பையும் நடிகர் சூர்யா தற்போது அறிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் தீபாவளி ரிலீசாக ஜெய் பீம் அமேசான் பிரைமில் வெளியாகப் போகிறது. இந்த படமும் 2டி நிறுவனம் தயாரிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன் படம்

ரம்யா பாண்டியன் படம்

பிக் பாஸ் முடித்த கையோடு சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார். ரம்யா பாண்டியன் உடன் வாணி போஜனும் இணைந்து நடித்திருக்கிறார்.

ஜோதிகா படம்

ஜோதிகா படம்

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள அடுத்த படமான உடன் பிறப்பே திரைப்படமும் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது. இந்த படத்தில் சூர்யா மற்றும் சசி குமார் இணைந்து நடித்துள்ளனர். கம்மி பட்ஜெட்டில் படங்களை தயாரித்து அமேசான் பிரைமுக்கு வரிசை கட்டி விற்றுள்ளார் சூர்யா என கூறப்படுகிறது.

ஓ மை டாக்

ஓ மை டாக்

அடுத்த மாதம் தொடங்கி இந்த ஆண்டு டிசம்பர் வரை மாதம் ஒரு படம் என அமேசான் பிரைமுக்கு மொத்தம் 4 படங்களை விற்றுத் தள்ளி இருக்கிறார் தயாரிப்பாளர் சூர்யா. டிசம்பர் மாதம் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை டாக் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

தியேட்டர்கள் திறக்காதா

தியேட்டர்கள் திறக்காதா

நடிகர் சூர்யா தொடர்ந்து 4 படங்களையும் அமேசான் பிரைமுக்கே விற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை தியேட்டர்கள் திறக்காதா? என்கிற கேள்வியும் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு படம் மட்டுமே ஒடிடியில் வெளியிடுகிறோம் எனக் கூறிய சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது வரிசைக் கட்டி ஒடிடி தளத்திலே படங்களை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

எதிர்ப்பு கிளம்பும்

எதிர்ப்பு கிளம்பும்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தியேட்டர்களை மொத்தமாக புறக்கணித்து விட்டு ஒடிடி தளத்திற்கே தனது முழு ஆதரவையும் கொடுத்து வருவதற்கு நிச்சயம் பெருமளவில் எதிர்ப்புகள் கிளம்பும் என்றும் கூறப்படுகிறது.

3ம் அலை

3ம் அலை

ஆனால், கொரோனாவின் 3ம் அலை காரணமாக அடுத்ததாக மொத்தமும் ஒடிடி பிசினஸ் தான் என்கிற தொலை நோக்குப் பார்வையுடன் தான் நடிகர் சூர்யா இப்போதே தயாராகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. தியேட்டர்கள் திறப்புக்காக பல படங்கள் காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த படமான ஜெய்பீமையும் சூர்யா ஒடிடியில் ரிலீஸ் செய்வது ரசிகர்களை திருப்தி படுத்துமா என்கிற கேள்வியையும் எழுப்பி வருகிறது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களும் இதே போல அமேசான் பிரைமிலேயே வெளியாகுமா? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஆனால், அதன் தயாரிப்பாளர்கள் வேறு நபர்கள் என்பதால் தியேட்டர் வெளியீட்டுக்கும் சாத்தியம் உண்டு என்றும் கூறுகின்றனர். காத்திருப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X