தோல்வி முகத்தில் சூர்யா.. காப்பாற்றும் என்று இருந்த கருப்பு படத்துக்கும் சிக்கலா?..என்ன கொடுமை சார்?
சென்னை: சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளியான ரெட்ரோ, கடந்த வருடம் வெளியான கங்குவா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இப்படமாவது வரிசையாக சூர்யா சந்திக்கும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே சரியாக அமையவில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் கடந்த வருடம் நடித்த கங்குவா படம் வெளியானபோது; தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும் என்கிற அளவுக்குத்தான் ப்ரோமோஷன்கள் எல்லாம் இருந்தன. அந்த ஹைப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு; அப்படத்தில் பெரிதாக ஒன்றுமே இல்லை என்பது பெரிய அதிர்ச்சியை கொடுக்க; படத்தை வைத்து செய்துவிட்டார்கள்.
விபரீதமான நிலைமை: சோஷியல் மீடியா எங்கும் கடுமையான ட்ரோலை சந்தித்தது படம். சூர்யாவின் கரியரில் அஞ்சான் படத்துக்கு பிறகு இவ்வளவு பெரிய ட்ரோலில் சிக்கிய படம் என்றால் அது கங்குவாதான். தொடர்ச்சியாக வந்த நெகட்டிவ் விமர்சனங்களால்; ஜோதிகாவே இன்ஸ்டாகிராமில் பெரிய போஸ்ட் போடும் அளவுக்கு நிலைமை சென்றது. வேண்டுமென்றே கங்குவாவை தோற்கடித்தார்கள் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்டோரும் குரல் கொடுத்தார்கள்.

ரெட்ரோவும் தோல்வி: கங்குவா கொடுத்த தோல்வியால் வந்த காயத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ படத்தை வைத்து சரி செய்துகொள்ளலாம் என்று கணக்கு போட்டிருந்தார் சூர்யா. ஆனால் இந்த வருடம் வெளியான அந்தப் படமும் தோல்விதான். கங்குவா அளவுக்கு பெரிய ட்ரோலை சம்பாதிக்கவில்லை என்றாலும்; இப்படமும் தங்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக அமைந்தது.
ஆர்.ஜே. பாலாஜியுடன் கருப்பு: இப்படி வரிசையாக தோல்வி படங்களை கொடுத்துவரும் சூர்யாவுக்கு இப்போது ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றிக்கான தேடலில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தார். ஆனால் அவர் வெளியேறி சாய் அபயங்கர் உள்ளே வந்தார். திரிஷா ஜோடியாக நடிக்கிறார். இப்படமாவது சூர்யாவின் தோல்வி முகத்தை மாற்றி வைக்கும் என்ற ஆசையில் இருக்கிறார்கள் அவரது ஃபேன்ஸ்.
படத்துக்கு சிக்கல்?: இந்நிலையில் கருப்பு பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது முதலில் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாவதாக இருந்ததாம். ஆனால் படத்தின் எடிட்டிங் பணிகளும், கிராஃபிக்ஸ் இன்னும் முடியாததால் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. இது சூர்யா ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது. பொங்கல் பண்டிகை விருந்தாக கருப்பை கொடுப்பார்கள் என்று பார்த்தால் இப்போது இப்படி ஒரு தகவல் வருகிறதே என்று அப்செட்டாகி கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











