நெருங்கும் கருப்பு படம் ரிலீஸ்.. இலங்கைக்கு சென்ற சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி.. யப்பா வேற லெவல் வரவேற்பு

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கருப்பு. முதன்முறையாக பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது. இப்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே படமானது ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் வேலைகள் முடியாததால் ரிலீஸ் ஆகவில்லை. ஒருவழியாக மே மாதம் 14ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் எதிர்பார்க்காத அடியை வாங்கிய சூர்யா அதிலிருந்து மெல்ல மீண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். அந்தப் படத்தால் ஏற்பட்ட மோசமான விஷயங்களை ரெட்ரோ சரிக்கட்டும் என்று நம்பியிருந்தார். ரசிகர்களும் அதீத ஆர்வத்தை வைத்திருந்தார்கள். ஆனால், எப்போதும் க்ளாஸிக்காகவும், கமர்ஷியல் டச்சோடும் படம் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறை ஏனோ தெரியவில்லை பயங்கரமாகவே சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் பலர் கூறினார்கள்.

Suriya s Karuppu Set for May 14 Release RJ Balaji Film Gains Buzz
Photo Credit:

ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யா கூட்டணி: கங்குவா படத்துக்கு ரெட்ரோ நன்றாகத்தான் இருந்தது என்றும் ஒரு பேச்சு ஓடியது. அதுமட்டுமின்றி இன்னும் சில வருடங்கள் கழித்து ரெட்ரோவை கொண்டாடுவார்கள் பாருங்கள் என்று சிலர் சத்தியமும் செய்திருக்கிறார்கள். சூர்யா ஒரு தரமான தியேட்டரிகல் ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இப்போது ஒரு அவசியமான ஹிட் தேவைப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜியின் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read
விஜய்யை பற்றி அவர் பிள்ளைகள் வந்து சொன்னார்களா?.. சங்கீதா விவகாரத்தில் பிரபல ஜோதிடர் ஓபன் டாக்
விஜய்யை பற்றி அவர் பிள்ளைகள் வந்து சொன்னார்களா?.. சங்கீதா விவகாரத்தில் பிரபல ஜோதிடர் ஓபன் டாக்

படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு: பாலாஜி ஏற்கனவே இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. சூர்யாவிடம் சொன்ன கதை நன்றாக இருக்கிறது என்றும்; இப்படத்தின் மீது சூர்யாவுக்கு ரொம்பவே நம்பிக்கை இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகிறார்கள். சூர்யாவை தாண்டி ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது ஆவல்தான் இருக்கிறது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் நல்ல ரெஸ்பான்ஸைத்தான் பெற்றிருக்கிறது. படமானது தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பிறகு மே 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ப்ரோமோஷனில் படக்குழு: ரிலீஸாக இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. ஆர்.ஜே. பாலாஜி பேட்டி கொடுத்து அதனை தொடங்கிவைத்தார். இப்போது அதன் தொடர்ச்சியாக சூர்யாவும், ஆர்.ஜே.பாலாஜியும் இலங்கை சென்றிருக்கிறார்கள். அங்கே சென்ற அவர்களுக்கு விமான நிலையத்தில் அந்த நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டில் சில நாட்கள் தங்கி ப்ரோமோஷனில் ஈடுபடவிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X