ஆசைக்கு நோ சொன்ன சூர்யா, ஓ.கே. சொன்ன அஜீத் குமார்

By Siva

சென்னை: ஆசை படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் சூர்யாவுக்கு தான் கிடைத்துள்ளது. அதை அவர் மறுத்த பிறகே அஜீத் நடித்துள்ளார்.

கார்மென்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர் சூர்யா. தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என்று யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் ஓய்வின்றி உழைத்துள்ளார். பட வாய்ப்புகள் வந்தும் அவற்றை வேண்டாம் என்று கூறிவிட்டு கார்மென்ட் தொழிலில் கவனம் செலுத்தினார். அவர் நடிகராகத் தான் ஆக வேண்டும் என்று இறைவன் எழுதி வைத்திருக்கையில் அவர் யார் நோ சொல்ல.

திரைத்துறையைவிட்டு அவர் ஒதுங்கினாலும், இயக்குனர்கள் அவரை விடுவதாக இல்லை. அவர் எந்த துறை வேண்டாம் என்று நினைத்தாரோ அதே துறையில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக உள்ளார்.

ஆசைக்கு நோ சொன்ன சூர்யா

ஆசைக்கு நோ சொன்ன சூர்யா

இயக்குனர் வசந்த் ஆசை படத்தில் நடிக்குமாறு சூர்யாவை தான் முதலில் அணுகியுள்ளார். அவரோ இருக்கட்டும் சார் என்ன விடுங்க என்று சொல்லிவி்ட்டாராம். இந்த தகவலை வசந்த் தெரிவித்துள்ளார்.

அஜீத்துக்கு கிடைத்த ஆசை

அஜீத்துக்கு கிடைத்த ஆசை

சூர்யா நோ சொன்ன பிறகு வசந்த் அந்த படத்தில் அஜீத் குமாரை நடிக்க வைத்துள்ளார். 'தல'க்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஆசையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூர்யாவை அணுகிய வசந்த்

மீண்டும் சூர்யாவை அணுகிய வசந்த்

ஆசை படத்தில் தான் நடிக்க மறுத்தீர்கள் நேருக்கு நேர் படத்திலாவது நடிக்க வாருங்கள் என்று வசந்த் மீண்டும் சூர்யாவை அணுகினார். இரண்டாவது முறையும் வந்த சினிமா வாய்ப்பை தவறவிட விரும்பாத சூர்யா அப்படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே தனது நண்பன் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

நடிக்க வந்ததும் நல்லதா போச்சு

நடிக்க வந்ததும் நல்லதா போச்சு

நடிக்க வந்த இடத்தில் ஜோதிகாவைப் பார்த்த சூர்யா அவரை காதலித்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சூர்யா நீங்க வசந்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X