எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான்.. அந்த பட்டத்தை வேற யாருக்கும் கொடுக்க முடியாது.. சூர்யா பளிச்!

சென்னை: கங்குவா படத்துக்காக சூர்யா மும்பை மற்றும் டெல்லி என வட இந்தியாவில் முகாமிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார் எல்லாம் செய்யாத அளவுக்கு தனது கங்குவா படத்துக்கான புரமோஷனை தீவிரமாக அனைத்து இடங்களிலும் செய்யும் முடிவில் உள்ள சூர்யா பாலிவுட்டை முதலில் குறி வைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், தேவி ஸ்ரீபிரசாத், சிறுத்தை சிவா மற்றும் ஞானவேல் ராஜா என ஒட்டுமொத்த கங்குவா டீமும் கலந்துக் கொண்டனர்.

suriya rajinikanth kanguva

அப்போது, செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் குறித்து எழுப்பிய கேள்விக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். வேற யாருக்கும் அந்த பட்டத்தை தூக்கி கொடுக்க முடியாது என பேசியுள்ளார்.

அஜித் பற்றி: முன்னதாக நடைபெற்ற பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, சமீபத்தில் அஜித்தை சந்தித்து பேசும் போது, “இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடல” என்று பேசினார். சிறுத்தை சிவா அஜித் மற்றும் சூர்யாவை வைத்து படம் எடுக்கலாமே என்கிற கேள்வியை எழுப்பும் போது தளபதி என விஜய் ரசிகர்கள் கூச்சலிட அவரையும் வைத்து படம் பண்ணலாமே என்றார்.

suriya rajinikanth kanguva

ஒரே சூப்பர் ஸ்டார் தான்: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா என சென்ற அந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் முடிவு கட்டினார். இந்நிலையில், சூர்யாவிடமும் அந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். வேறு யாருக்கும் அந்த பேட்ஜை கொடுக்க முடியாது என்றார்.

வளர்ப்பு அப்படி: சிவகுமாரின் வளர்ப்பு அப்படி சூர்யா எந்தவொரு இடத்திலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படவே இல்லை. ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் போட்டி போட வேண்டும் என்றும் நினைக்காமல் ரிலீஸ் தேதியை அக்டோபர் 10ல் இருந்து நவம்பர் 14க்கு தள்ளி வைத்த நல்ல மனிதர் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சூர்யாவுக்கும் அவரது கங்குவா படத்துக்கும் சப்போர்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

திஷா பதானி தாறுமாறு: கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகை திஷா பதானி பங்கேற்று வருகிறார். இந்த வாரம் அக்டோபர் 26ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று திஷா பதானி நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தில் அவர் நடித்த டூ பீஸ் காட்சிகள் சிலவற்றுக்கு சென்சார் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும், கங்குவா படத்தில் திஷா பதானி கவர்ச்சியில் தாராளம் காட்டியிருப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இண்டஸ்ட்ரி ஹிட்: இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் விஜய்யின் கோட் திரைப்படம் தான் 455 கோடி வசூலை ஈட்டியுள்ளது. ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் 300 + கோடிகள் என்கின்றனர். ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கடைசியாக லைகா 245 கோடி வசூல் என்பதை மட்டுமே வெளியிட்டது. இந்நிலையில், கங்குவா திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X