பாவம் மனுஷன் இப்படி உடைஞ்சிப்போயிட்டாரே.. சூர்யா முகமே சரியில்லையே.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: தெலுங்கில் பாகுபலி, கன்னடத்தில் காந்தாரா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய பான் இந்தியா வெற்றியை கொடுத்த நிலையில், பீரியட் படம் எடுத்தால் மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுப்பார்கள் என நினைத்த சூர்யா சிறுத்தை சிவா தன்னிடம் அப்படியொரு மிரட்டலான கதை இருக்கிறது என்று சொன்னதுமே நம்பி கங்குவா வண்டியில் ஏறிவிட்டார்.
கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை எடுத்த சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஒரே மாதிரியான படங்களை எடுத்துத் தள்ளினார். விவேகம் படம் பயங்கர ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. அதே போல கடைசியாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை எடுத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அப்படியொரு இயக்குநரை வைத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை 300 கோடி பட்ஜெட்டில் பெரும் நம்பிக்கையுடன் எடுத்த சூர்யா கடைசியில் கங்குவா படத்தின் ரிசல்ட் டல் அடித்த நிலையில், தற்போது கோயில் கோயிலாக சென்று கடவுளிடம் தனது கவலைகளை சொல்லி வருகிறார் என ரசிகர்கள் சூர்யாவின் கோயில் விசிட் புகைப்படங்களை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோயிலுக்கு செலவழிப்பதை விட்டுட்டு: கோயிலுக்கு செலவழிப்பதை விட்டு விட்டு பள்ளிக் கூடத்துக்கு செலவு செய்யலாமே என ஜோதிகா பேசியதை வைத்து பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், தற்போது சேலை அணிந்துக் கொண்டு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு தனது கணவர் சூர்யாவுடன் ஜோதிகா சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சூர்யா உடைஞ்சு போயிட்டாரே: சூர்யாவுக்கு பதிலாக கங்குவாவின் தோல்வி குறித்து ஜோதிகா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் பேசி வருகின்றனர். கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஜோதிகாவுடன் சூர்யா போஸ் கொடுத்த போட்டோவில் அவருடைய முகத்தில் சிரிப்பே இல்லை என்றும் மனதளவில் ரொம்பவே மனுஷன் உடைஞ்சு போயிட்டார் என்றும் ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். எப்போதும் உங்களுக்கு நாங்க இருக்கோம்னா அடுத்த படம் பெரிய ஹிட் ஆகும் கவலைப்படாதீங்க. கங்குவா படத்தில் நீங்க போட்ட உழைப்பை எல்லாம் மற்ற நடிகர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அன்பான ஃபேன்ஸ் இருக்கோம்: சூர்யா அண்ணா இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. அன்பான ஃபேன்ஸ் நாங்க இருக்கோம். எங்களுக்கு எப்போதுமே நீங்கதான் இன்ஸ்பிரேஷன் என ஏகப்பட்ட ஆதரவு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் சண்டை காரணமாகத்தான் சூர்யாவின் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை என்கிற பஞ்சாயத்தும் ஓடிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











