அடிச்சா வாங்கிக்க.. மகளுக்காக மகனிடம் எகிறிய விஜய் சேதுபதி.. தந்தை பாசம் உச்சக்கட்டம்
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான தலைவன் தலைவி திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது. அடுத்ததாக ட்ரெய்ன் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரது மகன் சூர்யா சேதுபதியும் ஃபீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் சேதுபதி கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கிவருகிறார். இங்கு ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லனாகவும் நடித்துவந்த அவர்; ஹிந்தியிலும் அதே ஃபார்முலாவை பின் தொடர்ந்தார். அதன் பலனாக ஃபர்ஸி வெப் சீரிஸும், ஜவான் திரைப்படமும் நல்ல ரிசல்ட்டை அவருக்கு கொடுத்தன. அதேசமயம் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் பாசிட்டிவ்வான லீடு ரோலில் நடித்த அப்ளாஸை அள்ளினார்.
ரசிகர்களின் கோரிக்கை: அவர் என்னதான் வில்லனாக நடித்து மிரட்டினாலும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கோரிக்கைக்கு ஒருவழியாக செவி மடுத்த சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம்தான் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் எதிர்பார்ப்புடன் வெளியான படம் மெகா ப்ளாக் பஸ்டர்.

என்ன ஸ்பெஷல்?: படத்தில் பெரிதாக கவனிக்கப்பட்டது என்றால் நித்திலனின் ஸ்க்ரீன் பிளே. நான் லீனியர் ஸ்டைலில் எழுதப்பட்டிருந்த திரைக்கதையை எந்த வித சொதப்பலும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் அனைவரது வாயையும் பிளக்க வைத்துவிட்டார். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டை எல்லாம் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். கண்டிப்பாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் அவர் இடம்பிடிப்பார் என்பதை மகாராஜா உணர்த்திவிட்டது.
தலைவன் தலைவியும் ஹிட்: அடுத்து வெளியான ஏஸ், தலைவன் தலைவி ஆகிய படங்களில் ஏஸ் தோல்வியையும், தலைவன் தலைவின் சூப்பர் ஹிட்டையும் பெற்றன. விஜய் சேதுபதி மட்டுமின்றி அவரது மகன் சூர்யா சேதுபதியும் ஹீரோதான். அனல் அரசு இயக்கத்தில் உருவான ஃபீனிக்ஸ் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் சூர்யா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சூர்யா சேதுபதி பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "ஒருமுறை நான் எனது தங்கையை உச்சக்கட்ட கோபத்தால் அடித்துவிட்டேன். அப்போது வீட்டிலிருந்த அப்பா என்னிடம் வந்து, எதற்காக என் மகளை அடிச்ச என்று கேட்டார். அவள்தான் என்னை முதலில் அடித்தாள் என்று கூறினேன். அதற்கு அவரோ அவள் அடித்தால் வாங்கிக்கொள். திருப்பி நீ ஏன் டா அடிக்கிற என்று கேட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











