வாடிவாசல் மோடுக்கு மாறிய சூர்யா.. கையில் மாடுடன் என்னம்மா நடந்து வறாரு பாருங்க.. செம வீடியோ!

சென்னை: பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அப்படியே வாடிவாசல் படத்திற்கும் தன்னை படிப்படியாக ஆயத்தப்படுத்தி வருகிறார்.

Recommended Video

வாடிவாசல் மோடுக்கு மாறிய சூர்யா.. கையில் மாடுடன் என்னம்மா நடந்து வறாரு பாருங்க.. செம வீடியோ!

மாடு பிடி வீரராக வாடிவாசல் படத்தில் நடிக்க வேண்டியுள்ள நிலையில், கையில் மாட்டை பிடித்துக் கொண்டு நடந்து வரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சூர்யா.

மேலும், ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கதையை நம்பும் சூர்யா

கதையை நம்பும் சூர்யா

வெறும் கமர்ஷியலை நம்பும் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் படங்களில் வலுவான கதை இருக்க வேண்டும் என்பதை ரொம்பவே தெளிவாக நம்பும் நடிகராக சூர்யா வலம் வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற நிலையில், கமர்ஷியல் முயற்சியை எதற்கும் துணிந்தவன் படத்தில் கையில் எடுத்தாலும் அதிலும் பொள்ளாச்சி பிரச்சனையை வைத்திருந்தார்.

பாலாவுடன்

பாலாவுடன்

நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் தன்னை ஒரு நடிகராக செதுக்கிய இயக்குநர் பாலாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா 41வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விசைப்படகு மீனவனாக சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், படத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வீடு செட்களை, வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு கொடுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

வள்ளுவர் சிலை முன்

வள்ளுவர் சிலை முன்

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. புதிய படங்களின் டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை ரிலீஸ் செய்வது, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது என இயங்கி வந்த சூர்யா சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் தயங்காமல் ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து டிரெண்டாக்கினார்.

ஜல்லிக்கட்டு மோடு

ஜல்லிக்கட்டு மோடு

இந்நிலையில், தற்போது வெறும் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் உடன் ரொம்பவே சிம்பிளாக மாடு ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். சூர்யாவின் இந்த வீடியோவுக்கு ஒரு மணி நேரத்தில் 7 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இந்த வீடியோவை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

கமர்ஷியல் இருக்காது

கமர்ஷியல் இருக்காது

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் என அடுத்த இரு படங்களிலும் கமர்ஷியல் பெரிதளவில் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X