Kanguva - ஸ்பீடு காட்டும் சூர்யா.. கங்குவா டப்பிங் ஆரம்பம்.. 1000 கோடி வசூல் சாத்தியம் ஆகுமா?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் டப்பிங் பணிகளை சூர்யா தொடங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை வெளியான எந்த ஒரு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை கோலிவுட்டில் எட்டாத நிலையில், சூர்யாவின் கங்குவா திரைப்படம் பல்வேறு மொழிகளில் 3டி படமாக வெளியாக உள்ள நிலையில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya starts Kanguva dubbing photos out now

பாக்ஸ் ஆபிஸை பிடிப்பாரா சூர்யா?: 2013ம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்தக் கூட்டம், என்ஜிகே, காப்பான் உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய வெற்றியை பாக்ஸ் ஆபிஸில் பெறவில்லை. சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் வெற்றிப் படங்களாக மாறினாலும் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. எதற்கும் துணிந்தவன் தியேட்டரில் வெளியாகியும் பெரிய வசூலை ஈட்டவில்லை.

கங்குவா டப்பிங்: இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா போர் வீரனாக நடித்து வரும் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்து இருக்கின்றன. சிறுத்தை சிவா, மதன் கார்கி உள்ளிட்டோருடன் இணைந்து டப்பிங் ஸ்டூடியோவில் சூர்யா டப்பிங் பேசும் புகைப்படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

வேகம் காட்டும் சூர்யா: ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், அதிரடியாக தேர்தல் முடிந்ததும் நம்முடைய கங்குவா படத்தை முதல் படமாக ரிலீஸ் செய்யும் முடிவுக்கு சூர்யா வந்திருப்பதாக கூறுகின்றனர். மே மாதம் கங்குவா படத்தை வெளியிடும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1000 கோடி சாத்தியமா?: கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்கள் 600 கோடி ரூபாய் எனும் இமாலய வசூல் சாதனையை கோலிவுட்டில் நிகழ்த்தின. ஆனால், பாலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் படங்கள் எல்லாமே 1000 கோடி வசூலை தொட்டு விட்டன. இந்நிலையில், சூர்யாவின் கங்குவா 1000 கோடி வசூல் ஈட்டும் முதல் தமிழ் படமாக மாறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறைந்த பட்சம் 500 கோடியாவது ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X