TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?: சூர்யா உருக்கமான விளக்கம்
சென்னை: என்.ஜி.கே. பட ரிலீஸ் தள்ளிப் போனது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று முதலில் அறிவித்தனர். பின்னர் பட வேலைகள் முடியாததால் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பட ரிலீஸ் தள்ளிப் போனது குறித்து சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது,
செல்வராகவன்
இன்னொரு சாதாரண படமாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் என்.ஜி.கே. படத்தை தேர்வு செய்தேன். செல்வராகவனுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். என் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தில் நல்ல விஷயம் வைத்திருக்கிறோம்.
தீபாவளி
படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் எங்களையும் மீறி சில விஷயங்கள் நடக்கும்போது நான் என் குழுவினருடன் இருக்க வேண்டும். என்.ஜி.கே. படம் தீபாவளி அன்று ரிலீஸாகும் என்று இதே மேடையில் தான் நான் சொன்னேன். ஆனால் தற்போது சொல்கிறேன் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவில்லை.
பொங்கல்
எனக்கு பாலா அண்ணா சொல்லியது நான் நினைவுக்கு வருகிறது. தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வருவதற்கு அது பட்டாசும், பொங்கலும் கிடையாது. அது படம். அது எப்பொழுது வருமோ அப்பொழுது தான் வரும் என்றார் அவர். சில விஷயங்கள் நம்மையும் மீறி நடக்கும்போது பாசிட்டிவாக இருக்க வேண்டும். நம்பிக்கையில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
கவலை
இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க. படத்தை தீபாவளிக்கு வெளியிட முடியவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறேன். உங்களை போன்றே எங்களுக்கும் வருத்தம் உள்ளது. உங்களின் நிலைமையும் புரிகிறது என்றார் சூர்யா. என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பை பார்த்து சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தான் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.