Suriya On Vijay - காலேஜ்ல நாங்கள் செஞ்சத சொன்னால் நல்லாருக்காது.. விஜய் பற்றி சூர்யா.. அப்படி என்ன செஞ்சாங்க?

சென்னை: விஜய்யும், சூர்யாவும் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். விஜய் இப்பொது GOAT படத்திலும் சூர்யா கங்குவா படத்திலும் நடித்துவருகின்றனர். GOAT படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் நடிக்கும் விஜய் அதோடு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு அரசியலில் எண்ட்ரி கொடுக்கிறார். சூர்யா அடுத்ததாக புறநானூறு படத்தில் நடிக்கிறார். வாடிவாசலில் இருந்து விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக வலம் வருபவர் விஜய். அவர் கடைசியாக நடித்த லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன், லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். லியோ படத்துக்கு எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு GOAT படத்தின் மூலம் விஜய் பதிலடி கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Suriya Talks about Vijay in Old Video Goes Trendin on Social Media

சூர்யாவின் கங்குவா: விஜய் எப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருக்கிறாரோ அதேபோல் சூர்யாவும் இருக்கிறார். அவரும் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே சிறப்பானதாக இருக்கிறது. அந்தவகையில் அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. அவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார். பத்து மொழிகளீல் 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகிறது.

விஜய் - சூர்யா கூட்டணி: இப்படி தமிழ் சினிமாவில் தனித்தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கும் சூர்யாவும், விஜய்யும் ஏற்கனவே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர், மற்றும் சித்திக் இயக்கத்தில் வெளியான ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அந்தப் படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. நடிப்பு மட்டுமின்றி சூர்யா நடித்த பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காக விஜய் ஒரு பாடலையும் பாடியிருப்பார். இப்படி இருவருமே ஆரம்பத்திலிருந்து நட்புடன் பழகிவந்தனர்.

லயோலா நட்பு: விஜய்யும், சூர்யாவும் சினிமாக்காரர்களின் வாரிசு என்றாலும் அவர்கள் கஷ்டப்பட்டே இந்த உயரிய நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் (லயோலா) ஒரே பாடப்பிரிவை (விஸ்காம்) தேர்ந்தெடுத்து படித்தவர்கள். இதன் காரணமாக சினிமாவை தாண்டிய நட்பு விஜய் மற்றும் சூர்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் பற்றி சூர்யா: இந்நிலையில் விஜய் குறித்து சூர்யா பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், "நானும் விஜய்யும் ஒரே பேட்ச் மேட்ஸ்தான். ஒருமுறை கல்லூரியில் நடந்த கல்ச்சுரல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது விஜய்யை முதன்முறையாக சந்தித்தேன். அப்போதிருந்துதான் நாங்கள் நண்பர்களாகினோம். கல்லூரி காலத்தில் நாங்கள் எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறோம். அதனை எல்லாம் இப்போது நான் சொன்னால் நன்றாக இருக்காது" என்றார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு இரண்டு பேரும் என்ன சேட்டை செய்திருப்பார்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

சினிமாவிலிருந்து விலகும் விஜய்: இதற்கிடையே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவர் சினிமாவிலிருந்து விலகுவதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். விஜய் நடிக்கும் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X