»   »  விக்னேஷ் சிவனை அடுத்து ராஜுமுருகன் படத்தில் சூர்யா: அப்போ முத்தையா..?

விக்னேஷ் சிவனை அடுத்து ராஜுமுருகன் படத்தில் சூர்யா: அப்போ முத்தையா..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ் சிவன் படத்தை அடுத்து சூர்யா ஜோக்கர் இயக்குனர் ராஜுமுருகன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஹரியின் எஸ்3 படத்தை முடித்த பிறகு சூர்யா பா. ரஞ்சித் படத்தில் நடிப்பார், முத்தையா படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சூர்யா முத்தையாவின் படத்தில் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு அப்பாவாக ராஜ்கிரண் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.

படம் அண்ணன், தங்கை இடையேயான பாசம் பற்றியது என்று கூட கூறப்பட்டது.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

முத்தையா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எஸ்3 படத்திற்கு பிறகு நடிக்க நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

முத்தையா

முத்தையா

முத்தையா படத்தில் நடிக்க முடிவு செய்த சூர்யாவிடம் பேசி விக்னேஷ் படத்தில் நடிக்க வைத்தது நயன்தாரா என்று கூறப்படுகிறது. சரி விக்கி படத்தை முடித்த பிறகு சூர்யா முத்தையாவுக்கு கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராஜுமுருகன்

ராஜுமுருகன்

சூர்யா விக்கி படத்தை அடுத்து ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. சூர்யா, ராஜுமுருகன் சேரும் படத்தை ஜோக்கரை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்குமாம்.

சூர்யா

சூர்யா

சூர்யா அடுத்த ஆண்டு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளாராம். படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார். இந்த பட வேலைகளை முன்பே துவங்கியிருக்க வேண்டியது. ஆனால் சூர்யா ரொம்ப பிசியாக இருப்பதால் ஓராண்டு தள்ளிப் போனது.

English summary
It is told that Suriya will team up with Joker director Raju Murugan after Vignesh Shivan's movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil