மீண்டும் ரோலக்ஸ்?.. லாரன்ஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சூர்யா?
சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அவரது நடிப்பில் அடுத்ததாக பென்ஸ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளியானது.
உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். சிறுவயது முதல் தான் படிக்க வைத்து இப்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டிருந்தார்.
ரோல் மாடல்: அதேபோல் இப்போது அதிக உதவிகளை செய்துவரும் கலக்கப்போவது யாரு பாலாவும் தனது ரோல் மாடல் ராகவா லாரன்ஸ்தான். அவர் சொன்னால் மாடியிலிருந்துகூட குதிப்பேன். அவர் ஒரு ஷங்கர் படம் மாதிரி பிரமாண்டமானவர். நான் ஷார்ட் பிலிம் மாதிரியானவன் என்று ராகவா லாரன்ஸை அண்மையில் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பென்ஸ்: இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, தயாரிக்கும் பென்ஸ் படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் ரோலக்ஸ்: ஏற்கனவே கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அதில் சூர்யாவின் எண்ட்ரி படு மாஸாக இருந்தது. மேலும் அந்த கேரக்டரை வைத்தே ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார் சூர்யா. இப்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் சூர்யா மீண்டும் ரோலக்ஸாக தோன்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











