சூர்யாவுக்கு நடிகைகள் என்றாலே இஷ்டம்தான்.. பொதுவெளியில் போட்டுக்கொடுத்த கார்த்தி

சென்னை: சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சூர்யா பறந்து பறந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சூழலில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கங்குவா. பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் நடித்திருக்கும் கங்குவா மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதேபோல் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் கங்குவாதான் ஹை பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்ற ஓவர் கான்ஃபிடன்ஸில் இருக்கிறார் அவர்.

kanguva suriya karthi

இரண்டு பாகங்கள் கங்குவா: கங்குவா படம் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.

kanguva suriya karthi

நவம்பர் 14ல் ரிலீஸ்: முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருந்தது. நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று சூர்யா அறிவித்தார். சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதில் கலந்துகொண்ட படக்குழுவினர் சூர்யாவையும், அவரது உழைப்பையும் வெகுவாகவே பாராட்டினார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சூர்யாவின் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

kanguva suriya karthi

சூடுபிடிக்கும் ப்ரோமோஷன்: படம் ரிலீஸாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அதில் சூர்யா மும்முரமாக கலந்துகொண்டுள்ளார். முக்கியமாக மும்பையில் நடக்கும் ப்ரோமோஷன் பணிகளில் சூர்யா கலந்துகொண்டு பல விஷயங்களை பேசிவருகிறார். இதற்கிடையே இந்தப் படம் மொத்த முப்பது மொழிகளில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. முப்பது மொழிகளில் படம் ரிலீஸாவதும் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

பாலையாவுடன் ப்ரோமோஷன்: ப்ரோமோஷனில் ஒரு பகுதியாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா Unstoppable With NPK என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சூர்யா. அவர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் வந்ததிலிருந்தே பாலகிருஷ்ணா சூர்யாவிடம் படு ஜாலியாக இருந்தார். குறிப்பாக இருவரும் அமரும்போது பாலைய்யா செய்த அலப்பறை ரசிக்கும்படியாகவே இருந்தது. அதேபோல் சூர்யாவின் அருகே வந்து கண்களை அகல விரித்து பார்த்து ஐ லவ் யூ என்று சொன்னதும் க்யூட்டாக இருந்தது.

போட்டுக்கொடுத்த கார்த்தி: நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சூர்யாவின் தம்பி கார்த்தியிடம் ஃபோன் செய்தார் பாலகிருஷ்ணா. அப்போது பேசிய கார்த்தியிடம் உங்கள் அண்ணன் நிறைய பொய் சொல்கிறாரே என்று பாலகிருஷ்ணா சொல்ல; அதற்கு கார்த்தியோ, 'அவர் சிறு வயதிலிருந்தே அப்படித்தான் சார். நிறைய பொய் சொல்வார். அவருக்கு ஹீரோயின்கள் என்றாலே இஷ்டம்தான்' என்றும் சிக்குபுக்கு ரயிலே பாடலுக்கு நடனமாடும் கவுதமியை ரொம்பவே பிடிக்கும் என்று சொல்ல சூர்யா அதிர்ச்சியடைந்து; நீ கார்த்தி இல்லடா கத்தி என்று சிரித்துக்கொண்டே கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X