ஜோதிகா நிஜமாவே கொடுத்து வச்சவரு.. பக்கா ஜென்டில்மேன் சூர்யா.. திஷா பதானி பக்கமே போகலயே!
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றதும் சில நடிகைகள் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு கவர்ச்சி பதுமைகளாக மாறிவிடுவார்கள். மேலும், நடிகர்களை கட்டியணைப்பதும், நடிகர்கள் நடிகைகளை தூக்கிக் கொண்டு புரமோஷன் என்கிற பெயரில் அட்டூழியம் செய்வதும் அரங்கேறும். ஆனால், நடிகர் சூர்யா கங்குவா படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றுள்ள நிலையில், தான் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தமிழில் இந்த ஆண்டு வெளியான பெரிய படங்களான இந்தியன் 2, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரியளவுக்கு எந்தவொரு புரமோஷனையும் படக்குழுவினர் செய்யவில்லை.

ஆனால், கங்குவா திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் பீரியட் படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டுமென்றால் பாலிவுட் ரசிகர்கள் முதல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஓவர்சீஸ் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தாக வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு அதற்காக சூர்யா இப்பவே தனது புரமோஷன் பயணத்தை தொடங்கியிருப்பது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பாகுபலி போல ஒரு படம்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தை இந்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இப்படித்தான் பெரியளவில் புரமோஷன்களை படக்குழு செய்தது. அதன் விளைவாகத்தான் அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை சாதித்தது. அதே போல கங்குவா திரைப்படமும் பிரம்மாண்ட பீரியட் படம் என்பதால் இந்த படத்தை அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும் வகையில் கொண்டு சேர்க்க இந்த புரமோஷன்கள் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாமர் குயின் திஷா பதானி: டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற கங்குவா புரமோஷனுக்கு நடிகை திஷா பதானி கலந்துக் கொண்டார். இந்த ஆண்டு பிரபாஸுக்கு ஜோடியாக கல்கி 2898 ஏடி படத்தில் அவர் நடித்திருந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்களை போட்டுத் தாக்கி வரும் நிலையில், அவரை காணவே ஒரு பெரிய கூட்டம் வருவது வாடிக்கைதான். அதிலும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தாராளமாக கவர்ச்சி உடையில் வந்து இளைஞர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்து இழுத்தார்.

திஷா பதானி பக்கத்திலேயே போகாத சூர்யா: கங்குவா படத்தின் நாயகனான சூர்யா தனது பக்கத்தில் தான் ஹீரோயின் திஷா பதானி நிற்க வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடவில்லை. வில்லன் பாபி தியோலை நடுவே நிற்க வைத்துக் கொண்டே போஸ் கொடுத்து வந்தார். சூர்யா ஒரு சூப்பர் ஜென்டில்மேன் என ரசிகர்கள் அந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், நடிகை ஜோதிகா ரொம்பவே கொடுத்து வச்சவர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன. மனைவி பக்கத்தில் இல்லை என்றால் நடிகைகளை கட்டிப்பிடித்தும், நடிகைகளுடன் நெருக்கம் காட்டியே ஹீரோக்கள் போஸ் கொடுத்து வரும் நிலையில், சூர்யா அதையெல்லாம் தவிர்த்து வருகிறாரே என்றும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.
பாபி தியோல் பார்த்த வேலை: நடிகர் சூர்யா பக்கத்தில் திஷா பதானியை நிற்க வைத்து பாபி தியோல் தனது பெருந்தன்மையை காட்டியதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு இணையாக வில்லத்தனத்தில் மிரட்டிய பாபி தியோல் கங்குவா படத்தில் சூர்யாவுடன் சண்டை போடப்போவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூர்யாவின் கங்குவா படம் குறித்து தற்போது பாலிவுட் ரசிகர்கள் அதிகளவில் பேச ஆரம்பித்து வரும் நிலையில், நவம்பர் 14ம் தேதி வெளியாகும் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வசூலை இந்தி பெல்ட்டில் அள்ளுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











