சூர்யாவுக்கு 50ஆவது பிறந்தநாள்.. இந்த வயதில் இத்தனை கோடி சொத்தா?.. அடேங்கப்பா
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. இப்போது அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. எந்தக் கதை கொடுத்தாலும் அந்தக் கதைக்காக தன்னை முழுதாக ஒப்புக்கொடுக்கும் அவர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அப்படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்துக்கு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு பதிலாக படுதோல்வியை சந்தித்தது.
சக்சஸ் மீட் எங்கே?: குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, 'டிசம்பர் மாதம் நடக்கும் கங்குவா படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார். அதேபோல் இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்றும் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. அதேபோல் எங்கே சக்சஸ் மீட் என்றும் ரசிகர்களும் கேள்வி கேட்டு கிண்டல் செய்தார்கள்.
கார்த்திக் சுப்புராஜுடன் படம்: இதற்கிடையே கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படமும் தோல்வியடைந்தது. அதேசமயம் கங்குவா அளவுக்கு மோசமில்லை என்ற பெயரையும் பெற்றது. வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் சோகமடைந்திருக்கிறார்கள்.

கருப்பு சூர்யா: இப்போது அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்க்த்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் அப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். முக்கியமாக இதுவும் தோல்வி படமாக அமைந்துவிட்டால் ஹாட்ரிக் தோல்வியாகிவிடுமே என்ற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது. இன்று வெளியான படத்தின் டீசர் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்திருக்கிறது.
சூர்யாவின் சொத்து மதிப்பு: இந்நிலையில் அவர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில்; அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு 40 கோடி ரூபாய்வரைக்கும் சம்பளமாக பெறும் சூர்யாவுக்கு மொத்தம் 350 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஈசிஆரில் இப்போது சொகுசு பங்களாவை கட்டிவரும் அவர்; ஏற்கனவே தி.நகரில் பிரமாண்டமாக வீடு கட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











