சூர்யாவின் கங்குவா டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா? கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தின் முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகி வரும் கங்குவா படம், 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

suriya s kanguva teaser release date will be announced soon

மாஸ் போஸ்டர்: இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். அனிமல் படத்துக்குப் பிறகு நடிகர் பாபி தியோலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கும் நிலையில், அதை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் கங்குவா படத்திலும் இவருக்கு தரமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. உதிரன் என பெயரிடப்பட்டுள்ள அவரது கதாபாத்திரத்தின் தோற்றம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

பவர் ஆப் ஃபயர்: கங்குவா படத்தின் தலைப்பு வெளியானபோது, கங்குவா என்றால் என்ன, அர்த்தம் என்ன என தெரிந்து கொள்ள இணையவாசிகள் இணையத்தில் வலைவீசி தேடினார்கள். ரஜினிகாந்த் நடித்த ஒரு இந்தி படத்தில் தலைப்பு இது என படத்தின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் பரவியதால், கங்குவா என்பது படத்தில் நாயகனின் பெயர் என்றும் கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் இயக்குநர் விளக்கம் கொடுத்திருந்தார்.

suriya s kanguva teaser release date will be announced soon

கங்குவா அப்டேட்: படத்தின் கிளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை பொறுத்து தான் இப்படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியும் என தனஞ்சயன் கூயிருந்தார். ஆனால் அநேகமாக கங்குவா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கங்குவா படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அநேகமாக ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X