Karuppu Box Office: 24வது நாளில் 1 கோடிக்கும் அதிகமான வசூல்.. உலகளவில் தெறிக்கவிட்ட கருப்பு வசூல்!
சென்னை: என்னதான் முதலமைச்சர் விஜய்க்கு ஆர்ஜே பாலாஜி நன்றி சொன்ன காரணத்தினால் அவரை ஆன்லைனில் சூர்யா ரசிகர்கள் அடித்தாலும் கருப்பு திரைப்படம் தான் சூர்யாவோட ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக மாறி நிற்கிறது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இந்த வசூல் சாதனையை விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் முறியடிப்பாரா என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் மற்றும் தமிழ் டப்பிங்கில் வெளியான பெத்தி படங்களை விட சூர்யாவின் கருப்பு திரைப்படம் 24வது நாளிலும் 1.75 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டில் அள்ளியிருப்பது ஒட்டுமொத்த அன்பான ஃபேன்ஸையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே ஆர்ஜே பாலாஜி தான்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மட்டுமின்றி அர்ஜுன், சரத்குமார், சத்யராஜ், ஆர்யா, ஜெய், ரவி மோகன், பிரதீப் ரங்கநாதன், கென் என நடிகர்கள் எல்லாமே திறமையானவர்கள் தான். சரியான இயக்குநர் மற்றும் சரியான கதையுடன் அவர்கள் படங்களை கொடுத்தாலே பிளாக்பஸ்டர் உறுதி தான்.
300 கோடியை கடந்த வசூல்: சாக்னிக் தளத்திலேயே சூர்யாவின் கருப்பு திரைப்படம் 24 நாட்களில் ஒட்டுமொத்தமாக 304 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஏற்கனவே 300 கோடிக்கும் அதிகமான வசூலை சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 25வது நாள் வெற்றி விழாவையும் படக்குழு விரைவில் கொண்டாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 350 கோடி வரை படத்தின் வசூல் இருக்கும் என்கின்றனர்.
அமைதிப்படுத்திய சூர்யா: இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் கருப்பு எடிட்டர் கலைவாணன் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக சூர்யா ரசிகர்கள் வன்மத்தை கக்கிய நிலையில், ரசிகர்களை ஆட விட்டு அழகு பார்க்காமல், உடனடியாக சூர்யா வெளியிட்ட பதிவு அன்பான ரசிகர்களை அமைதியாக்கியது. நடிகர் சூர்யா போல மற்ற முன்னணி நடிகர்களும் நடிகைகளும் இருக்க வேண்டும் என்றும் ஆன்லைன் சண்டையை ஊக்குவிக்க கூடாது என்றும் சூர்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications