Retro: சூர்யாவோட அடுத்த சம்பவத்தை பார்க்க இத்தனை மாசம் வெயிட் பண்ணனும்.. ரெட்ரோ ரிலீஸ் தேதி இதோ!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்பது முன்பே தெரிந்தால் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் இந்த பொங்கலுக்கு வந்திருக்கும் என்றெல்லாம் தகவல்கள் வெளியான நிலையில், சூர்யா ரசிகர்கள் அப்போ படம் ரெடியா சீக்கிரமே வந்துவிடுமா என நினைத்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களை கொஞ்சம் இருங்க பாய் என ஆசுவாசப்படுத்தியுள்ளார் சூர்யா.

அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் வெளியான பின்னர் தான் சூர்யாவின் அடுத்த சம்பவம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ரெட்ரோ படம் பார்க்க ரசிகர்கள் இன்னும் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

suriya retro pooja hegde

ஆனால், இப்போதே ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் கங்குவா படம் போல அடிக்கடி ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றாமல் சொன்ன தேதியில் வந்தாலே ரசிகர்கள் சூப்பர் ஹேப்பி ஆகிவிடுவார்கள் என்கின்றனர்.

அஜித் பிறந்தநாளில் ரெட்ரோ: அஜித்தின் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாகவுள்ளதாக நடிகர் சூர்யா தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அஜித்தின் பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஏப்ரல் 10ம் தேதியே குட் பேட் அக்லி படம் லாக் செய்யப்பட்ட நிலையில், மே 1ம் தேதியை தற்போது சூர்யா லாக் செய்திருக்கிறார்.

சம்மர் சம்பவம்: மாணவர்களுக்கு தேர்வுகள் எல்லாம் முடிந்து விடுமுறை விடப்படும் சம்மரில் சரியாக திட்டமிட்டு சூர்யாவின் ரெட்ரோ படத்தை களமிறக்கும் நிலையில், சரியான சம்பவமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை புரமோஷன்களில் கொஞ்சம் அடக்கி வாசித்துவிட்டு படம் வெளியாகி பேசட்டும் என விடுவார் சூர்யா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூலியுடன் மோதுமா?: அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மோதும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், யாருடனும் மோதல் இல்லை என்கிற நிலையை சூர்யா கடைபிடித்து வருவது தெரிகிறது. ஆனால், அதே நாளில் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானால் என்ன ஆகும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. உழைப்பாளர் தினம் தான் 'கூலி' படத்துக்கான சரியான தேதி என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் கூலி வெளியாகும் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சூர்யா படத்துக்கு போட்டி பெரிதாக இருக்காது என்றே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X