மமிதா பைஜுவே மயங்குற அளவுக்கு செம ஹேண்ட்ஸமாக இருக்கும் சூர்யா.. பட்டாம்பூச்சி பறக்குது!

சென்னை: சூர்யா, மமிதாபைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் "விஸ்வநாத் & சன்ஸ்" திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தப் படம், வரும் 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான "பட்டாம்பூச்சி/நேனோ பட்டர்ஃப்ளை" பாடல் வெளியாகி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

முதல் முறை கேட்கும்போதே காதுகளுக்குள் தேன் பாய்ச்சும் மெல்லிசையாக ஒலிக்கும் இந்தப் பாடல், இந்த சீசனின் ஆகச்சிறந்த சார்ட் பஸ்டராக உருவெடுத்துள்ளது. இணையத்தில் வெளியானது முதல் தற்போது வரை யூடியூப்பில் மியூசிக் லவ்வர்ஸ் இந்தப் பாடலைத் தான் லூப்பில் கேட்டு கொண்டாடி வருகின்றனர். ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும் போது, வரும் நாட்களில் இசைப் பிரியர்களின் ஃபேவரிட் பிளேலிஸ்ட்டில் இப்பாடல் முதலிடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகிறது.

Suriya s Vishwanath and Sons Pattampoochi songs so romantic with Mamitha Baiju

ஜி.வி. பிரகாஷின் மெலடி மேஜிக்:

மெலடி பாடல்களை உருவாக்குவதில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதுமே கிங் தான். அதை மீண்டும் ஒருமுறை இந்த 'பட்டாம்பூச்சி' பாடல் நிருபித்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் ஜி.வி. பிரகாஷ் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் திரையில் மேஜிக் நடப்பது வழக்கம். அந்த வகையில், இப்போதும் தனது காந்த கானத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளார். இதனால், இப்படத்தின் முழு ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறியுள்ளது.

ஈர்க்கும் குரலும், நெஞ்சை நனைக்கும் வரிகளும்:

சமீபத்திய ஹிட் பாடல்கள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடகி சுபலக்ஷினி, தன் தனித்துவமான குரலால் இப்பாடலுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளார். மேலும், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதிய வரிகள், காதலின் தூய்மையையும் இளமையின் உற்சாகத்தையும் அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை எளிதில் கொள்ளையடித்துள்ளன.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு:

"விஸ்வநாத் & சன்ஸ்" திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனால், படத்தில் எமோஷன்ஸ், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது. 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த நாக வம்சி, மீண்டும் ஒரு மாஸ் தியேட்டர் கொண்டாட்டத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் இதில் ஒன்றிணைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கொண்டாட்டப் படமாக "விஸ்வநாத் & சன்ஸ்" அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X