அது சூர்யாவோட குழந்தை இல்லையாம்.. தம்பியாம்.. அட என்னய்யா சொல்றீங்க?.. வாரிசு வாடை வராம இருந்தா சரி!
சென்னை: டோலிவுட் நடிகர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிப்பதும், தமிழ் நடிகர்கள் டோலிவுட் இயக்குநர்கள் படங்களில் நடிப்பதும் சகஜமாக மாறிவிட்டது. ஹீரோக்கள் பான் இந்தியா நடிகர்களாக வலம் வர வேண்டும் என்றும் பக்கத்து ஸ்டேட்டிலும் மார்க்கெட்டை அதிகரிக்க இப்படியெல்லாம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தனுஷை வைத்து வாத்தி படத்தையும் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படத்தையும் இயக்கி 100 கோடி கிளப் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியானது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். சூர்யா மற்றும் மமிதா பைஜு இருக்கும் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சூர்யா ஒரு குழந்தையுடன் இருக்கும் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் கதை பற்றிய விவாதங்களும் யூகங்களும் கிளம்பி உள்ளன.
ஹாட்ரிக் அடிக்கப்போகும் சூர்யா: கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் பரவின. அதன் காரணமாகவே நல்லா ஓடவேண்டிய ரெட்ரோ படமும் சுமாராகவே ஓடியது என அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கெல்லாம் துவண்டு விழும் ஆளில்லை சூர்யா இந்த ஆண்டு அடுத்தடுத்து புதிய படங்களை ரிலீஸ் செய்து கோலிவுட்டை கண்டிப்பாக காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் ஜித்து மாதவன் இயக்கும் படம் என தொடர்ந்து 3 படங்களும் இந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவோட குழந்தை இல்லையா?: தனுஷை வைத்து வாத்தி படத்தை எடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்ற வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்து வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படமும் கோலிவுட்டில் நன்றாகவே ஓடியது. இந்நிலையில், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தையும் அவர் தான் இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதில் இருக்கும் குழந்தை சூர்யாவின் குழந்தை என நினைத்துக் கொண்டிருக்க அது அவரோட தம்பி என்றும் அதுதான் கதையில் ட்விஸ்ட் என்றும் யூகங்களை கிளப்பி உள்ளனர். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் இருக்கும் நிலையில், தொழிலதிபர் விஸ்வநாத்தின் மூத்த மகன் தான் சூர்யா என்றும் இளைய மகன் தான் அந்த குழந்தை என்றும் இருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு விஷயம் தான் மையக்கதையாக இருக்கும் என்கின்றனர்.
வாரிசு வாடை: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தை பார்த்து விட்டு மெகா சீரியலை விட மோசமாக உள்ளது என பலரும் ட்ரோல் செய்தனர். பீஸ்ட் படத்தை விட வாரிசு படம் தான் விஜய் ரசிகர்களையே ரொம்பவே அப்செட் ஆக்கியது. இந்நிலையில், அதுபோல ஏதும் ஆகிவிடக் கூடாது என சூர்யா ரசிகர்களே சிலர் டவுட்டை கிளப்பி வருகின்றனர். கண்டிப்பாக வெங்கி அட்லூரி சொதப்ப மாட்டார் என்றும் வாரிசு வாடை வராது கண்டிப்பாக கார்த்தி, நாகார்ஜுனா நடித்த தோழா படத்தை போல ஃபீல் குட் குடும்ப படமாக இருக்கும் என்றே இன்சைட் ரிப்போர்ட்டுகள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











