ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கல்லூரி கால நண்பர்களான விஜய்யும், சூர்யாவும் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது 3வது முறையாக இருவரும் சேர்ந்துநடிக்கவுள்ளனர்.

சூர்யாவின் அறிமுகப்படமான நேருக்கு நேர் படத்தில் விஜய் அவருடன் சேர்ந்து நடித்தார். படம் மற்றொரு அக்னி நட்சத்திரமாக இல்லாவிட்டாலும் கூடவிஜய், சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சேர்ந்து பிரண்ட்ஸ் படத்தில் இணைந்தனர். இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றி இருவருக்கும் சரியானமார்க்கெட்டைக் கொடுத்தது.

இந்த இரு படங்களிலும் விஜய்யுடன் நடித்தபோது, சூர்யா ஒரு சாதாரண நடிகராக, ஆடக் கூட தெரியாமல், நோஞ்சானாக, பிலிம்ரோல்களை சிரித்தே நிரப்பிக்கொண்டிருந்தார்.

பாலாவின் இயக்கத்தில் நந்தா வெளியான பிறகே ஸ்டார் நடிகரானார். பாடி பில்டும் செய்து கொண்டு இப்போது இளைய கன்னிகளின் தூக்கம் கலைக்கும்முன்னணி நடிகராகிவிட்டார்.

வளர்ந்துவிட்டாலும் விஜய்யுடனான நட்பை கெட்டியாக வைத்திருக்கிறார். விஜய்யும் சூர்யா என்றால் ஓடி வந்துவிடுகிறார்.

இந் நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனம் இப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. படத்தின் பெயர், இயக்குனர்உள்பட எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

இருவரையும் சந்தித்துப் பேசி இணைந்து நடிக்க ஒப்புதல் மட்டுமே வாங்கியுள்ளார்களாம்.

விஜய்க்கு ஏற்ற ஆக்ஷன் தீனியும், சூர்யாவுக்கு ஏற்ற நடிப்புத் தீனியும் கொடுக்கப்படும் என்கிறது ஆனந்தி பிலிம்ஸ் வட்டாரம்.

சூர்யா நியூஸ் போட்டுவிட்டு ஜோதிகாவை விட்டுவிட்டால் அந்தப் பாவம் நம்மை சும்மா விடுமா?..

ஸோ.. இதோ ஜோதிகா குறித்து ஒரு பொடிமாஸ்..

பென்ஸ் கார் வைத்துள்ள நடிகைகளில் ஜோவும் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியும் தான். இந்தக் கார் மீது ஜோவுக்கு ரொம்ப பிரியம். சமீபத்தில்சந்திரமுகி சூட்டிங்கை முடித்துவிட்டுக் கிளம்பும்போது மரக் கட்டைகளில் கார் மோதி ஆங்காங்கே நெளிந்துவிட்டதாம்.

சிராய்ப்பு காருக்குத்தான் என்றாலும் ஜோதிகா ரொம்பவே பதறிவிட்டாராம். டிரைவருக்கு கன்னாபின்னாவென டோஸ் விட்டாராம்.

கொஞ்ச நேரத்திலேயே சகஜமாகி டிரைவரிடமே ஸாரி கேட்டாராம். தாட்ஸ் ஜோதிகா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X