சூர்யா மீது ஆஸ்கர் புகார்

By Staff

வாரணம் ஆயிரம் படத்தில் நடித்துக் கொடுக்காமல் சூர்யா டபாய்ப்பதாக அவர் மீது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

பிரமாண்ட படங்களைக் கொடுப்பதில் பிரபலமானவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். காதலுக்கு மரியாதை, அந்நியன், வானத்தைப் போல, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார்.

இப்போது தசாவதாரம், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில், சூர்யா மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கெளதம் மேனன் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது. அடுத்த கட்டமாக ஆப்கானிஸ்தான், அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெறவிருந்தது.

இதற்காக விசாவுக்கு அப்ளை செய்து விட்டார் ரவிச்சந்திரன். அது தொடர்பான நடைமுறைகளும் முடிந்து விட்டது. இந்த நிலையில், திடீரென ஹரியின் வேல் படத்தில் நடிக்கப் போவதாக சூர்யா அறிவித்தார். ஹரிக்கு மொத்தமாக 75 நாட்களுக்கு கால்ஷீட்டையும் அள்ளிக் கொடுத்தார்.

இதனால் வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூர்யாவின் தன்னிச்சையான போக்கால் கடுப்பான ரவிச்சந்திரன் தனது படத்தை முடித்துக் கொடுக்காமல், வேல் படத்தில் சூர்யா நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

ரவிச்சந்திரன் கொடுத்துள்ள புகாரில், எனது படத்தை புறக்கணித்துள்ளார் சூர்யா. வேல் படத்தில் நடிப்பதற்காக வாரணம் ஆயிரம் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.

கடந்த மாதம் வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு தொடங்கியது. 30 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வேல் படத்தில் நடிக்கப் போய் விட்டார்.

இந்தப் படத்துக்காக இதுவரை ரூ. 5 கோடியை நான் செலவழித்துள்ளேன். வெளிநாட்டுப் படப்பிடிப்புக்காக நான் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த நிலையில், வேல் படத்துக்காக 75 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.

அவர் வேல் படத்தில் நடிக்கப் போனால், எனது உழைப்பும், முதலீடும் வீணாகி விடும். பெரும் நஷ்டத்தை நான் சந்திக்க நேரிடும். எனவே எனது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் சூர்யா நடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன்.

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நேற்று மாலை நடந்த கூட்டத்தில் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். சூர்யாவிடம் இன்று விசாரணை நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X