»   »  கண்ணபிரான் சூர்யா!

கண்ணபிரான் சூர்யா!

Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் தம்பி கார்த்திக்- ப்ரியாமணியை வைத்து பருத்தி வீரனை ஒரு வழியாய்முடித்து விட்ட அமீர் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார்.

கண்ணபிரான் என பெயர் சூட்டப்பட்டுள்ள அமீரின் புதிய படத்தில் நாயகனாக சூர்யாநடிக்கவுள்ளார்.

நந்தாமூலம் சூர்யாவுக்கு சூப்பர் பிரேக் கொடுத்தவர் பாலா. அதே போல, மெளனம்பேசியதே மூலம் சூர்யாவை நிலை நிறுத்தியவர் அமீர். எனவே பாலாவைப் போலஅமீரையும் அதிகம் மதிப்பவர் சூர்யா.

அண்ணனை வைத்து மெளனமாக பேசிய அமீர், சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்துபருத்தி வீரன் என அட்டகாசமான ஒரு படத்தை முடித்துள்ளார். இந்தப் படம்வெளிவருவதற்கு முன்பே அதிகம் பேசப்படுகிறது.

இப்போது அமீர் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். மறுபடியும் சூர்யாவைவைத்தே புதிய படத்தை இயக்கப் போகிறாராம். கண்ணபிரான் என படத்திற்குப்பெயர் சூட்டியுள்ளார்.

இதுவும் வலுவான கதைப் பின்னணி கொண்ட படம்தான். இப்படம் சூர்யாவுக்குத்தான்பொருந்தும் என்பதால் வேறு யாரையும் யோசிக்கவில்லையாம் அமீர்.

சூர்யா இப்போது வாரணம் ஆயிரம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதைமுடித்து விட்டு கண்ணபிரானாக மாறுகிறார் சூர்யா.

கண்ணபிரானை தனது சொந்த பேனரான டீம் ஒர்க் புரொடக்ஷன் சார்பாக தயாரித்து,இயக்கப் போகிறார் அமீர்.

ஹீரோயின் உள்ளிட்ட விவகாரங்களை இன்னும் முடிவு செய்யவில்லையாம். சூர்யாவர கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் ஆற, அமர ஆட்களை முடிவு செய்யப்போகிறார் அமீர்.

அடுத்த அசத்தலுக்கு ரெடி!

Read more about: surya in amirs next venture
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil