»   »  ஜோ தான் பொண்ணு.. சூர்யா சொல்லிட்டார்

ஜோ தான் பொண்ணு.. சூர்யா சொல்லிட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் வேறு யாருமல்ல,ஜோதிகாவேதான் என்று தமிழர்கள் மனதைப் போட்டு பிராண்டிக் கொண்டிருந்தசஸ்பென்ஸை சூர்யா போட்டு உடைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் மறுபடியும் வருமா என்று கேட்கும் அளவுக்குபடு கமுக்கமாக அதேசமயம் படா உறுதியாக காதலித்து வருபவர்கள் ஜோதிகா,சூர்யா.

சூர்யாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்டால் சிரிப்பார். சரி ஜில்லென்று காதல் எப்படி இருக்கிறது என்று நம்மைரொம்ப விவரமான ஆளாக நினைத்துக் கொண்டு கேட்டால்,

படத்தை பற்றித்தானே கேட்கிறீங்க... என்று ஒன்னும் தெரியாத புள்ளை மாதிரி சிரித்துவிட்டு, படம் சூப்பராவந்திருக்கு, அதுல பூமிகாவும் இருக்காங்க என்று நமக்கு வேண்டாத பதிலை ரொம்ப சீரியஸாக சொல்லிவிட்டுத்தான் போவார்.

முதலில் ரொம்பவே மூடி மறைக்க முயன்ற சூர்யாவும், ஜோதிகாவும், பின்னர் ரொம்பநாளைக்கு அது சாத்தியமில் என்பதால் அவ்வப்போது வெளிப்படையாகவேவிழாக்களில் ஜோடியாக கலந்து கொள்ள ஆரம்பித்தனர்.

சிவக்குமார் குடும்பத்தில் அவரைத் தவிர குடும்பத்தினர் அத்தனை பேரும் ஜோவுக்குஓ.கே. சொல்லி விட்டனர். அப்பாதான் எதிர்ப்பாக இருந்து வந்தாராம்.

இப்போது அவரும் ஒரு வழியாக இறங்கி வந்து விட்டார். அக்டோபரில்சூர்யாவுக்குக் கல்யாணம் என்று சமீபத்தில் அறிவித்தார். ஆனால் பொண்ணுயாரென்று அவர் சொல்லவில்லை. இதனால் மறுபடியும் சஸ்பென்ஸ் எகிறியது.

பொண்ணு யாரப்பா, ஜோவா, இல்லையா என்று டீக் கடைகள் முதல் சாப்ட்வேர்கம்பெனியில் வேலைபார்ப்பவர்கள் வரை அத்தனை பேரும் கூடிக் கூடி குசுகுசுக்கஆரம்பித்தனர்.

ஜோதிகாதான் சூர்யாவை மணக்கப் போகிறவர் என்று அவருடைய அக்கா நக்மாகூறினாலும்,

ஜோதிகாவும் புதுப் படங்களில் நடிக்காமல் கழன்று கொள்ள ஆரம்பித்ததாலும் 2 தெலுங்குப் படங்களுக்குவாங்கிய காசை திருப்பித் தந்ததாலும் பொண்ணு இவர் தானோ என்று கிட்டத்தட்ட உறுதியான நிலைக்குகோலிவுட் சகலபாடிகள் வந்தனர்.

ஆனாலும் சம்பந்தப்பட்டவர்களின் வாயிலிருந்து எதுவும் வராததால், சஸ்பென்ஸ்கூடியதே தவிர குறையவில்லை.

இந்த சஸ்பென்ஸை இப்போது சூர்யா உடைத்துள்ளார். நான் கல்யாணம் செய்துகொள்ளப் போவது ஜோதிகாவைத்தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் சூர்யா.

எங்களைப் பற்றி சினிமாவிலும், பத்திரிகைகளிலும் நிறைய செய்திகள் வந்துவிட்டன. இதற்கு மேலும் அமைதி காக்க முடியாது. அன்பை வெளிப்படுத்தவேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைக்கிறேன்.

இருந்தாலும் அப்பாதான் முறையாக அறிவிக்க வேண்டும். அதற்காகத்தான்காத்திருந்தோம். ஜோதிகாவுடன் நிச்சயம் திருமணம் நடைபெறும். தேதியை அப்பாஅறிவிப்பார் என்று கூறியுள்ளார் சூர்யா.

அப்பாடா, பிரச்சினை ஓஞ்சுச்சுப்பா, இனிமே நம்ம வேற வேலையைப் பார்க்கப்போகலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil