சர்காரைத் தொடர்ந்து சூர்யா படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்
Recommended Video

சென்னை: சூர்யா 39 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். விரைவில் செல்வராகவனின் என்.ஜி.கே திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து இறுதிச் சுற்று பட இயக்குனர் சுதா கோங்கரா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அது சூர்யாவின் 38வது படமாகும்.

இந்த நிலையில் சூர்யாவின் 39வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக உள்ள இயக்குனர் ஹரி இயக்க உள்ளார். இப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு பெரிய தொகை முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் படங்கள் என தொடரும் சூர்யா ஹரி கூட்டணி இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. சூர்யாவுடன் இணையும் அடுத்த படம் நிச்சயம் சிங்கம் சீரீஸ் கிடையாது என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹரி தெரிவித்திருந்தார். அதனால் சூர்யா 39 எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படம் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
சர்கார் திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











