»   »  சர்வம்-விலகினார் சூர்யா

சர்வம்-விலகினார் சூர்யா

Subscribe to Oneindia Tamil

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த சர்வம் படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார். வேறு நடிகரைவைத்து இப்படத்தை முடிக்க விஷ்ணுவர்த்தன் முடிவு செய்துள்ளார்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், சூர்யாநடிக்க சர்வம் என்ற படம் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை சில்லுன்னு ஒரு காதல் படத்தைத் தயாரித்தஞானவேல் (இவர் சூர்யாவின் சொந்தக்காரர்) தயாரிப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் நடித்த ஹீரோயின் கிடைக்காமல் முதலில் அவதிப்பட்டார்கள். பின்னர் ஒரு வழியாக மும்பையைச்சேர்ந்த ஹன்சிகா என்ற நடிகை தேர்வானார். இவரையும், சூர்யாவையும் வைத்து ஸ்டில்களையும் எடுத்துவிட்டனர். நாளை மூணாறில் படப்பிடிப்புத் தொடங்குவதாக இருந்தது.

இந்த நிலையில் இப்படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார். ஞானவேலும் இப்படத்தைத் தயாரிக்க மாட்டார் என்றுஅறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால்இயக்குநர் விஷ்ணுவர்த்தன் என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார்.

சூர்யா இந்தப் படத்தில் ஒப்ந்தமாவதற்கு முன்பே கெளதம் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படம்தாமதமானதால், இப்படத்தில் நடிக்க முன்வந்தார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு சூர்யாவை நீளமாக தலைமுடியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தாடிவைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். அவரும் சம்மதித்தார். டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என நினைத்திருந்தேன்.

இந்த நிலையில் எனது படத்தில் ஒரு ஷெட்யூலை முடித்து விட்டு கெளதம் படத்தில் நடிக்க சூர்யா விரும்பினார்.கெளதம் படத்தில் சூர்யா ஒட்ட வெட்டப்பட்ட தலை முடியுடன் நடிக்க வேண்டும். இதனால் எனது படப்பிடிப்புபாதிக்கப்படும் என நினைத்தேன்.

இதையடுத்து சூர்யாவை சந்தித்து இரண்டு படங்களில் நீங்கள் நடித்தால் இரண்டுமே பாதிக்கப்படும்,உங்களுக்கும் எனக்கும் வேஸ்ட் ஆப் டைம் ஆகும் என்றேன்.

இதையடுத்து இருவரும் நண்பர்களாக பிரிந்து விடலாம் என சூர்யா சொன்னார். இந்தப் படம் இல்லாவிட்டால்என்ன அடுத்த படத்தில் இருவரும் இணைவோம் என்று சூர்யா சொன்னதை நானும் நட்போடு ஏற்றுக்கொண்டேன். சூர்யாவுக்கு நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

சர்வம் படத்தில் சூர்யாவுக்குப் பதில் வேறு ஒருவர் நடிக்கவுள்ளார். விரைவில் அவர் யார் என்பதை முடிவுசெய்வோம் என்றார் விஷ்ணுவர்த்தன். புதிய நடிகர் முடிவானதும் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil