»   »  உடல் பொருள் ஆவி, சூர்யா!

உடல் பொருள் ஆவி, சூர்யா!

Subscribe to Oneindia Tamil

அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் சூர்யா.காக்க காக்க மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கை கோர்க்கிறார்கள் சூர்யாவும், கெளதம். இருவரும் இதற்குமுன்பே ஒரு படத்தில் இணைந்திருக்க வேண்டும். சென்னையில் ஒரு மழைக்காலம் என அழகாக பெயரிடப்பட்டஅந்தப் படத்திற்கு பொருத்தமான ஹீரோயின் கிடைக்காததால் படத்தைத் தள்ளி வைக்க வேண்டியதாயிற்று.

அதன் பிறகுதான் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை ஆரம்பித்து முடித்தார் கெளதம்.இடையில் சரத்குமார், ஜோதிகாவை வைத்து சிலந்தியையும் (இப்போது இது பச்சைக்கிளி முத்துச்சரம்) முடித்துவிட்டார்.

இப்போது ஃப்ரீயாகியுள்ள கெளதம், அடுத்த படத்தை சூர்யாவை வைத்து சுடவுள்ளார். அப்படத்திற்கும் அழகானதமிழில் பெயர் சூட்டியுள்ளார் கெளதம். உடல் பொருள் ஆவி என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில்சூர்யாவுக்கு மிகவும் வித்தியாசமான வேடமாம். இதுவரை இல்லாத அளவுக்கு கெட்டப் சேஞ்ச் செய்து நடிக்கப்போகிறாராம் சூர்யா.

சூர்யாவுடன் மூன்று புதுமுகங்களையும் அறிமுகப்படுத்துகிறார் கெளதம். காக்க காக்க போல இந்தப் படம்சூர்யாவுக்கு புதுப் பெருமையைத் தேடிக் கொடுக்கும் என்று இப்போதே பேச்சு கிளம்பி விட்டது.இப்படத்திற்காக சூர்யாவுக்கு ஜோடியைத் தேடும் பணியில் தீவிரமாக உள்ளார் கெளதம். புள்ளையைப்புடிச்சவுடன் ஷூட்டிங்கை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் கெளதம்.

வழக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தாமரை பாட்டெழுதுகிறார். ஸோ, இன்னும் ஒரு இனியபடம் ரெடியாகப் போகிறது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil