ஹீரோ .. ஹீரோ ..
பிதாமகன் தகராறு இப்போதைக்கு ஓயாது போலத் தெரிகிறது.
விக்ரமுக்கும், பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது ஒரு வழியாக அடங்கியுள்ளது. இப்போதுபடத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாம்.
படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் அட்டகாசமான நடிப்பும் ஒரு காரணம். ஆனால் அவருக்கும் இன்னும் சம்பளபாக்கி உள்ளதாம். இத்தனைக்கும் படத்தின் மூலம் நல்ல கலெக்ஷன் பார்த்துள்ளாராம் துரை. ஆனால் அதைவெளிக்காட்டாமல் படத்தின் மூலம் ஏகப்பட்ட செலவு என்று கணக்கு காட்டி வருகிறாராம்.
இதனால் சூர்யா தரப்பு கடுப்பாகி உள்ளதாம். இருந்தாலும், விக்ரமைப் போலவே, பாலாவுக்காக துரையை ஒன்றும்செய்யாமல் விட்டு விட்டாராம் சூர்யா. இருந்தாலும் பாலாவிடம் கொட்டித் தீர்த்து விட்டாராம். அவரோ, எனக்கேதுரை இன்னும் சம்பளத்தைத் தரலைப்பா, கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினாராம்.


Click it and Unblock the Notifications











