»   »  இது உனக்குக் கண்டிப்பாக "சூட்" ஆகும் ப்ரோ... ஜெயம் ரவியை பாராட்டிய சூர்யா!!

இது உனக்குக் கண்டிப்பாக "சூட்" ஆகும் ப்ரோ... ஜெயம் ரவியை பாராட்டிய சூர்யா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "2015 ம் ஆண்டின் சிறந்த நடிகர் என்ற பட்டம் கண்டிப்பாக உனக்குப் பொருந்தும்" என்று நடிகர் ஜெயம் ரவியை, சூர்யா வாழ்த்தியிருக்கிறார்.

Surya Appreciate Jayam Ravi for Best Actor Award

கடந்த ஆண்டில் ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம் போன்ற 3 படங்கள் ஹிட்டடித்து ஜெயம் ரவியை ஹாட்ரிக் நாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது.

மேலும் இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன் மற்றும் பூலோகம் 2 படங்களுமே சமூக அக்கறையுடன் கூடிய படங்களாகவே அமைந்திருந்தன.

Surya Appreciate Jayam Ravi for Best Actor Award

இந்நிலையில் பிரபல தமிழ் பத்திரிக்கை ஒன்று 2015 ம் ஆண்டின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை ஜெயம் ரவிக்கு வழங்கியது. இந்த விருதுக்கு ஜெயம் ரவி தகுதியானவரே என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் "வாழ்த்துக்கள் ரவி! இந்த விருது உனக்கு கண்டிப்பாக பொருத்தம் தான் சகோதரா" என்று பாராட்டி இருக்கிறார்.

சூர்யாவின் இந்தப் பாராட்டு தற்போது ஜெயம் ரவியின் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகபடுத்தி இருக்கிறது.

English summary
Actor Surya Appreciate to Jayam Ravi for Best Actor Award. He wrote on Twitter "Wow! Congrats Ravi!! Truly Deserve Brother".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil