ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டும் சூர்யா... யாரு சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!
சென்னை : நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது சூர்யா41 படத்தில் நடித்து வருகிறார். தற்போது முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது.
சில தினங்கள் இடைவெளியை அடுத்து இரண்டாவது கட்ட சூட்டிங் அடுத்த மாதத்தில் கோவாவில் துவங்கவுள்ளது.
இந்த இடைவெளியை வீணாக்க விரும்பாத சூர்யா, வாடிவால் படத்திற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரது ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யா, வாடிவால், சூர்யா41 உள்ளிட்டவற்றை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். அந்த அளவில் அவருக்கு ஃபேன் பேஸ் அதிகரித்துள்ளது.

சூர்யா தயாரிப்பு
தொடர்ந்து நடிப்பில் மட்டுமின்றி தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிறப்பான பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார் சூர்யா. தற்போது அவரது தயாரிப்பில் இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குநர் சுதா கொங்கரா மேற்கொண்டுள்ளார்.

சூர்யா 41 படம்
இதனிடையே தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் தனது சூர்யா 41 படத்தில் நடித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் முதல்கட்ட சூட்டிங், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து 34 நாட்கள் நடத்தப்பட்டது.

பயிற்சியில் சூர்யா
இதையடுத்து கோவாவில் அடுத்த மாதம் 2வது கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இடைவெளியையும் சூர்யா சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். சூர்யா 41 படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவர் இணையவுள்ள நிலையில், தற்போது அதற்கான பயிற்சியில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

சொந்தமாக ஜல்லிக்கட்டு மாடுகள்
இதற்கென அவர் காங்கேயன் மற்றும் நாட்டு மாடு என இரண்டு மாடுகளை சொந்தமாக வாங்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுடனும் அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தனியார் ஊடகம் நடத்திய விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு
வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போயுள்ளது. வெற்றிமாறனும் தனது விடுதலை படத்தின் சூட்டிங்கில் பிசியாக உள்ள நிலையில் விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான சூர்யா
தன்னுடைய கேரக்டர்களுக்காக மெனக்கெடும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். நாளுக்கு நாள், படத்திற்கு படம் அவரது நடிப்பு மேம்பட்டு வருகிறது. நடிப்பில் முதிர்ச்சியும் காணப்படுகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்த படத்திற்காக சொந்தமாக ஜல்லிக்கட்டு மாடுகளை வாங்கி அவர் பயிற்சி மேற்கொண்டு வருவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











