விடாது துரத்தும் பிரச்சனை.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சூர்யா!
சென்னை: பருத்திவீரன் பஞ்சாயத்தே இன்னும் ஓயாத நிலையில், சூர்யாவின் பெயர் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது.

இந்த பிரச்சனை குறித்து, படுமோசமாக விமர்சனம் எழுந்த போதும், சூர்யா, கார்த்திக் வாய் திறக்காமல் உள்ளனர்.
ஜெய் பீம்: கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சூர்யாவிற்கு சினிமாவில் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் ஜெய் பீம். நேரடியாக ஓடிடியில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் பாராட்டினார்கள். இந்த நேரத்தில், நடிகர் சூர்யா முதலமைச்சருக்கு ஒரு கோடி நிதியை, இருளர் அமைப்பிற்காக கொடுத்திருந்தார்.
அகரம் ஃபவுண்டேஷன் பணம்: தற்போது பருத்திவீரன் பஞ்சாயத்து பெரிதாகி இருக்கும் நிலையில், ஜெய்பீம் படத்திற்கு இருளர் அமைப்புக்கு பணம் கொடுத்தது பற்றி அதிர்ச்சி வெளியாகி உள்ளது. அதாவது, சூர்யா இருளர் அமைப்பிற்கு கொடுத்த தொகை அவருடைய சொந்த பணம் கிடையாது என்றும், அகரம் ஃபவுண்டேஷனிலிருந்துதான் சூர்யா அந்தத் தொகையை கொடுத்திருக்கிறார்.
பருத்திவீரன் சர்ச்சை: அது மக்கள் அகரம் நிறுவனத்திற்காக கொடுத்த பணம் தான் என்றும், எப்படி பார்த்தாலும் அந்த பணம் சூர்யாவின் கைகளுக்கு தான் வந்து சேரும். படத்தில் நடித்ததோடு விட்டுவிடக்கூடாது என பிரமோஷனுக்காக அவர் இதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும், பருத்திவீரன் சர்ச்சைக்கு சூர்யா வாய் திறக்காதுதான், அடுத்தடுத்த சர்ச்சைக்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











