»   »  சூர்யாவால என் தூக்கமே போச்சு.. புலம்பும் கார்த்தி!

சூர்யாவால என் தூக்கமே போச்சு.. புலம்பும் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அண்ணன் சூர்யாவால் தனது தூக்கத்தை தான் அடிக்கடி தொலைத்து வருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். சூர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி கார்த்தியும் நடிக்க வந்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Surya Gives me Sleepless Nights says Karthi

இந்நிலையில் சூர்யாவால் தான் அடிக்கடி தனது தூக்கத்தை தொலைப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது "சூர்யா ஒவ்வொரு முறையும் தனது அர்ப்பணிப்புத் தன்மையால் தனது உருவத்தையே மாற்றி விடுகிறார்.

இதன் மூலம் அவர் தொடர்ந்து தூங்காத இரவுகளை எனக்கு அளித்து வருகிறார். இந்தப் போஸ்டர்களை பாருங்கள்" என்று சமீபத்தில் வெளியான 24 படத்தின் போஸ்டர்களை குறிப்பிட்டிருக்கிறார்.

This man keeps pushing the barrier of transformation and dedication every time and gives me sleepless nights. Look at this poster #24themovie #suriya #arrahman #proudbrother

Posted by Karthi on Sunday, January 24, 2016

மேலும் தனது சகோதரர் சூர்யாவை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும் நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த போஸ்டர் மிகவும் திகிலூட்டுவதாக இருக்கிறது, படத்தின் கதையை யூகிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Karthi says about His Brother Surya's new look in 24 "This man keeps pushing the barrier of transformation and dedication every time and gives me sleepless nights. Look at this poster".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil