கஜினியில் என்னை நடிக்கச் சொன்னதே சூர்யாதான்- ஆமீர்கான்

By Shankar

சென்னை: கஜினி ரீமேக்கில் நடிக்கத் தயங்கிய என்னை, அந்தப் படத்தில் தைரியமாக நடியுங்கள், பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னதே சூர்யாதான் என்று நடிகர் ஆமீர்கான் கூறினார்.

தூம் 3 படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்த நடிகர் ஆமீர்கானிடம், தமிழ் படங்களை 'ரீமேக்' செய்வதாக இருந்தால் எந்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஆமீர்கான், 'இந்தப் படம்தான் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்த நேரத்தில் எது மனதைக் கவர்கிறதோ அந்தப் படத்தை தேர்வு செய்யக் கூடும்.

சந்தேகம்

சந்தேகம்

உண்மையில் கஜினி ரீமேக்கில் நடிக்கும் முன் எனக்கு நிறைய தயங்கங்கள். இந்த மாதிரி கதைக்கு நான் பொருந்துவேனா, சூர்யா அளவு நடிக்க முடியுமா? என்ற சந்தேகங்கள் இருந்தன. வில்லன்களை துரத்தி அடித்து பழி வாங்குவது போல் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை.

சூர்யா

சூர்யா

அதனால் சூர்யாவுடன் மொபைலில் பேசினேன். என்னால் உங்கள் அளவுக்கு நடிக்க முடியுமா? என்று அவரிடம் கேட்டேன். நிச்சயமாக உங்களால் நடிக்க முடியும் என்று அவர் தைரியம் சொன்னார். சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் அந்த படத்தில் நான் நடித்தேன். இதுபோல படங்கள் அமைந்தால் அவற்றில் நடிப்பது பற்றி யோசிப்பேன்," என்றார்.

வதந்தி

வதந்தி

கே.பாலசந்தரின் உன்னால் முடியுமா தம்பி என்ற படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானதே? என்ற கேள்விக்கு,

"இல்லை.. அப்படி எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. ‘தாரேஜமீன்பர்' படத்தை நான் இயக்கியதற்காக சென்னையில் எனக்கு ஒரு விருது வழங்கினார்கள். அந்த விருதை இயக்குநர் கே.பாலசந்தர் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது என் நடிப்பை மிகவும் புகழ்ந்து பாராட்டினார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.

சமீபத்தில் சர்வதேச படவிழாவிற்காக நான் சென்னை வந்த போது கே.பாலசந்தரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தூம்-3 படத்தை பற்றி கேட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய ‘உன்னால் முடியும் தம்பி' படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்திதான்," என்றார்.

தமிழே தெரியாத பாத்திரம்

தமிழே தெரியாத பாத்திரம்

நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, "எனக்கு தமிழ் தெரியாததால் தயக்கமாக இருக்கிறது. தமிழ்ப் படத்தில், தமிழே தெரியாத ஒரு கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X