'ஐயம் எ காம்ப்ளான் பாய்...'- தென் இந்தியாவின் விளம்பர தூதரானார் சூர்யா!

By Shankar

சென்னை: காம்ப்ளான் ஊட்டச்சத்து பானத்தின் தென் மண்டல விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.

மன உறுதிக்கு வலிமை தரும் புதிய காம்ப்ளான்' என்ற வசனத்தைப் பேசியபடி, தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார் சூர்யா.

இந்த புதிய விளம்பரம் கடந்த சில தினங்களாக ஒளிபரப்பாகிவருகிறது.

காம்ப்ளான் பானம் கடந்த 50 ஆண்டுகளாக விற்பனையில் முன்னணியில் உள்ளது.

முதல் முறையாக..

முதல் முறையாக..

இந்த பொன்விழா ஆண்டையொட்டி, தங்கள் விளம்பரங்களுக்காக நடிகர் சூர்யா உள்பட மூன்று பிரபலங்களை ஒப்பந்தம் செய்துள்ளது. காம்ப்ளான் நிறுவனம் முதல் முறையாக தனது பான வகைகளின் விளம்பரத்திற்காக திரைப்பட நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்துள்ளது.

பெரிய வாய்ப்பு

பெரிய வாய்ப்பு

இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, "லட்சக்கணக்கான குடும்பங்களின் அபிமான பெயர் காம்ப்ளான். புகழ்பெற்ற இந்த பிராண்டுடன் இணைந்திருப்பதை பொதுமக்களுடன் நான் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இந்தியாவின் மிக நம்பகமான பிராண்டுகளுள் ஒன்றாக திகழும் காம்ப்ளான் உடன் இணைந்தது எனக்கு பெருமையளிக்கிறது," என்றார்.

அனைவரும் விரும்பும் நடிகர்

அனைவரும் விரும்பும் நடிகர்

காம்ப்ளான் பிராண்டின் உரிமையாளரான ஹெய்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீமா மோடி, "கஜினி, சிங்கம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களால் ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது.

அனைத்து தரப்பினரும் பெரிதும் விரும்பும் அவரை எங்களுடைய புதிய டி.வி. விளம்பரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி அடைகிறோம்," என்றார்.

நன்மதிப்பு

நன்மதிப்பு

அருகிலிருந்த முழு நேர இயக்குனர் வி.மோகன், "தென் மாநிலங்களில் எமது பிராண்டின் நன்மதிப்பை மேலும் அதிகரிக்க சூர்யா உதவுவார்," என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X