»   »  மீண்டும் ஏவி.எம்.முடன் சூர்யா

மீண்டும் ஏவி.எம்.முடன் சூர்யா

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஏவி.எம். நிறுவனத்துடன் மீண்டும் சூர்யா கை கோர்க்கிறார். பேரழகன் படத்திற்குப் பிறகு மறுபடியும் ஏவி.எம். நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தைக் கொடுக்கப் போகிறாராம் சூர்யா.

புகழ் பெற்ற ஏவி.எம். நிறுவனத்துடன் சூர்யா இணைந்த முதல் படம் பேரழகன். பெரும் வெற்றியைக் கொடுத்த படம் மட்டுமல்லாது, சூர்யாவின் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக் கொணர்ந்த படமும் கூட.

இந்த நிலையில் சிவாஜியைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு ஏவி.எம். தயாராகி விட்டது. இப்படத்தை கேமராமேன் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இவர்தான் சிவாஜி படத்திற்கு கேமரா மேன் என்பது நினைவிருக்கலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சூர்யாதான் நாயகன்.

பிப்ரவரி மாதம் இந்தப் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வாரணம் ஆயிரம் படத்தை முடிப்பதற்கு வசதியாக அடுத்த பிப்ரவரி வரை காத்திருக்கப் போகிறார்களாம்.

தற்போது ஏவி.எம். நிறுவனம் இந்தி சிவாஜியை வெளியிடும் வேகத்தில் மும்முரமாக உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

Read more about: surya
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil