கொளுத்திப் போடாதீங்கப்பா.. உறவினர் நிச்சயத்திற்கு ஜோடியாக வந்த சூர்யா-ஜோதிகா.. வெளியான வீடியோ!

சென்னை: மும்பையில் குடும்பத்தோடு செட்டிலாகி உள்ள நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

surya jyothika tirupur

கங்குவா: வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 3டியில் உருவாகி உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 10ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அதே தேதியில் வேட்டையன் திரைப்படம் வெளியாவதில், கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

படம் நவம்பர் மாதம் வெளியாகுமா, இல்லை தீபாவளிக்கு வெளியாகுமா.. என்பது தான் இன்னும் தெரியவில்லை. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என அழைக்கப்படும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தூம் 4: மேலும் நடிகர் சூர்யா, இந்தியில் உருவாகி வரும் தூம் 4ம் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், சூர்யா அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்து இருப்பதால், இதன் பேச்சு வார்த்தை இழுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: சூர்யா - ஜோதிகா இருவரும் குழந்தைகளின் படிப்பிற்காக குடும்பத்தோடு மும்பையில் இருப்பதாக கூறிய போதும், இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெறபோவதாகவும் வதந்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், திருப்பூரில் உறவினரின் நிச்சயதார்த்த விழாவிற்கு சூர்யா, ஜோதிகா இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர்.

அப்போது மணமக்களுக்கு மோதிரங்களை எடுத்து கொடுத்து நிச்சயதார்த்த விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X