ஹீரோ .. ஹீரோ ..

By Staff

காக்க.. காக்கவுக்குப் பின் அதே டீமுடன் இணைந்து சூர்யா நடிக்கும் சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தின்சூட்டிங் கடந்த 5ம் தேதி தொடங்கிவிட்டது.

காக்க.. காக்க டீம் அப்படியே மீண்டும் இணைந்து எடுக்கும் இந்தப் படத்தை இயக்குவது அதே கெளதம் தான்.பாடல்கள் தாமரை. இசை ஹாரிஸ் ஜெயராஜ். சினிமாட்டோகிராபி ஆர்.டி. ராஜசேகர், நடனம் அதே பிருந்தா தான்.

இப்போது மணி ரத்னத்தின் ஆயுத எழுத்தில் படு பிசியாக இருக்கும் சூர்யா, அதை முடித்தவுடன் இந்தப் படத்தில்முழு மூச்சாய் இறங்குவாராம்.

ஆயுத எழுத்தில் சூர்யாவின் கெட்-அப்பை முழுமையாக மாற்றிவிட்டார் மணி. மீசையை மழித்து விட்டு, ஒருரிம்லெஸ் கண்ணாடியை மாட்டிவிட்டு ஆளை அசத்தலாக மாற்றி இருக்கிறார். சூர்யா, மாதவன், (பேட்!) பாய்ஸ்சித்தார்த் ஆகியோர் இருந்தாலும் சூர்யாவுக்கே அதிக முக்கியத்துவம் தந்து படத்தை எடுத்து வருகிறார் மணிரத்னம்.

இது தவிர ஏவி.எம் தயாரிக்கும் படத்தில் கூனனாக சூர்யா நடிப்பது தெரிந்தது தான். இந்தப் படத்துக்குபேரழகன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஜோதிகாவுடன் இதில் ஜோடி சேருகிறார் சூர்யா. இப் படத்தில்ஜோதிகாவுக்குத் தான் இரட்டை வேடம் என்றார்கள். இப்போது சூர்யாவுக்கும் இரட்டை வேடம் என்கிறார்கள்.

ஒரு கேரக்டர் கூனனாகவும் இன்னொரு கேரக்டர் கல்லூரி மாணவனாகவும் செய்யப் போகிறாராம்.

அதே போலஜோதிகாவுக்கு ஒரு ரோல் பார்வையற்றவராகவும் இன்னொன்று கல்லூரி மாணவியாகவும்அமைக்கப்பட்டுள்ளதாம்.

மிக வித்தியாசமான கதை கொண்ட இப் படம் மலையாளத்தில் வசூலைக் கொட்டியதால் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. இசை யுவன் சங்கர் ராஜா.

இதன் படப்பிடிப்பு 26ம் தேதி தொடங்குகிறதாம். தமிழ்ப்புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இது தவிர இன்னொரு மெகா பட்ஜெட்டிலும் சூர்யா கமிட் ஆகியிருப்பதால் 2004ம் ஆண்டு முழுவதுமே அவரதுகால்ஷீட் புல் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X