»   »  சூர்யாவின் நவ அவதாரம்

சூர்யாவின் நவ அவதாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
சிவாஜி கணேசன், கமல்ஹாசனைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் அவதாரம் எடுக்க ஆர்வம் வந்து விட்டது போலும். ஏர்செல் விளம்பரத்தில் 9 விதமான கெட்டப்புடன் கலக்கலாக தோன்றி நடித்துள்ளார் சூர்யா.

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 கெட்டப்களில் வந்திருப்பார். இப்போது அதையும் தாண்டி தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கந்தசாமியில் விக்ரம் பெண் வேடம் உள்பட நான்கு விதமான கெட்டப்களில் வரப் போகிறார். இந்த வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார்.

ஏர் செல் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் சூர்யா, 9 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் ஒரு நிமிடம்தான் வருகிறது. ஆனால் சூர்யாவின் அத்தலான கெட்டப்களால் விளம்பரம் வெகுவாக பிரபலமாகி விட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கு டிவிகளை இந்த சூர்யா விளம்பரம்தான் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஓம் சாந்தி ஓம் புகழ் கேமராமேன் மணிகண்டன் இந்த விளம்பரப் படத்தின் கேமராப் பணியை மேற்கொண்டுள்ளார். ஐரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லதா மேனன் இதை தயாரித்துள்ளார்.

தோட்டக்காரர், வாட்ச்மேன், டிராபிக் கான்ஸ்டபிள், 3 சினிமா செட் உதவியாளர்கள், இயக்குநர், நடிகர் மற்றும் ஜாலி நபர் என 9 விதமான வேடங்களில் இந்த விளம்பரப் படத்தில் சூர்யா அசத்தியுள்ளார்.

அப்படியே படத்திலும் கெட்ட கெட்டப்களில் வந்து அசத்திடுங்க சூர்யா!

Read more about: surya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil