'வேலு' vs 'வேல்'!
வேல்' படத்தில் தன்னுடைய காமெடிக் காட்சிகளைக் குறைக்கச் சொன்ன ஹீரோ சூர்யா மீது கடும் கோபத்தில் உள்ளாராம் காமெடி புயல் வடிவேலு!
| Click here for more images |
ஹரி இயக்கத்தில், ஆசின் அசத்தல் வேடத்தில் நடிக்க, சூர்யா ஹீரோவாக கலக்கும் வேல் படத்தில் வடிவேலுவின் காமெடி போர்ஷனை வெயிட்டாக வைத்திருந்தார் ஹரி.
வடிவேலுவின் காமெடி மட்டுமே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் வருகிறதாம். இது தவிர சூர்யாவுடன் இணைந்தும் பல காட்சிகளில் வருகிறாராம் வடிவேலு.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் படத்தின் ஹீரோ சூர்யா என்பதை விட வடிவேலுதான் பிரதானமாகத் தெரிவதாக யூனிட்டே சொல்கிறதாம்.
இதனால் கடுப்பாகிப் போன சூர்யா, வடிவேலுவின் காட்சிகளைக் குறைக்கச் சொல்லி இருக்கிறார் ஹரியிடம். இந்த விஷயம், வடிவேலுவின் காதுகளை எட்டியது.
என்ன இது, சின்னப் புள்ளத்தனமா இருக்கு... என்று டென்ஷன் ஆன வடிவேலு, கொதித்துக் கொந்தளித்துப் போய் விட்டாராம்!
'தமிழ் சினிமாவுல இன்னிக்கு பிஸினசே இந்த வடிவேலுவை வச்சுத்தான். இதுல என்னுடைய சீன்லயே கை வச்சா வெளங்குன மாதிரிதான். என் போர்ஷன கட் பண்ணா, நான் டப்பிங் பேசமாட்டேன்' என்று ஹரியின் உதவியாளர்களிடம் சொல்லிவிட்டாராம் வடிவேலு.
போனஸாக, இனிமேல் சூர்யாவுடன் நான் நடிக்கவே மாட்டேன் என்றும் சொல்லி வருகிறாராம்.
என்னடா இது, வேலுவால் வந்த வேதனை என்று விசனமாகி, புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஹரி.


Click it and Unblock the Notifications











