சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... டிசம்பர் 17ல் ரிலீஸ்?

சென்னை : நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் படம் எதற்கும் துணிந்தவன்.

இந்தப் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தை வரும் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா கோலிவுட்டில் தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய் பீம் வரும் நவம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அநீதியை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக அவர் நடித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

தொடர்ந்து வாடிவாசல், பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் சூட்டிங் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 17ல் ரிலீஸ்?

டிசம்பர் 17ல் ரிலீஸ்?

இதையடுத்து படத்தை வரும் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணிற்கு நீதியை பெற்றுத்தர சூர்யா தனியாளாக போராடுவதாகவும் அவர்களை பழிவாங்குவதாகவும் கதை நகர்வதாக கூறப்பட்டுள்ளது.

கிராமத்து கெட்டப்

கிராமத்து கெட்டப்

படத்தில் கிராமத்து கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார். அவருக்கு பிரியங்கா அருள் மோகன் ஜோடியாகியுள்ளார். மேலும் சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் ராஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் படத்தில் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை எந்திரன் புகழ் ரத்னவேலு மேற்கொண்டுள்ளார். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இவர் இணைந்துள்ளார்.

Recommended Video

யாருடனும் போட்டி இல்லை... தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு!
இமான் இசை

இமான் இசை

படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங்கை கவனித்துக் கொள்ள, சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும் எதற்கும் துணிந்தவன் என்ற இந்த தலைப்பு சூர்யாவின் தந்தை சிவக்குமார் நடிப்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பான கேரக்டர்

இயல்பான கேரக்டர்

பாண்டிராஜ் எப்போதுமே இயல்பான கேரக்டர்களை தன்னுடைய படங்களில் உலவ விடுவார். அதேபோல இந்தப் படத்திலும் இயல்பான மற்றும் எளிமையான சூர்யாவை பார்க்க முடிகிறது. ஆனால் போஸ்டர்களில் அவர் கையில் அரிவாளுடன் காணப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X