பிப்ரவரி 4ல் ரிலீசாகும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... ரசிகர்கள் உற்சாகம்
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.
சூர்யாவின் முந்தைய இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீசான நிலையில் தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். படத்தில் கிராமத்து கெட்டப்பில் சூர்யா சிறப்பாக காணப்படுகிறார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

திரையரங்குகளில் ரிலீஸ்
சூர்யாவின் முந்தைய இரு படங்களும் ஓடிடியில் வெளியாகியதால் அவரது ரசிகர்கள் அவரை திரையரங்குகளில் காண மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூட்டிங் நிறைவு
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பகல் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக நேற்றைய தினம் சக் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

ரசிகர்கள் உற்சாகம்
இந்த அறிவிப்பையொட்டி ரசிகர்கள் பல்வேறு யூகங்களை செய்திருந்தாலும் பொதுவாக ரிலீஸ் குறித்த அப்டேட்டாகவே இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பகல் 12 மணியளவில் படத்தின் அப்டேட்டை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.
பிப்ரவரி 4, 2022ல் ரிலீஸ்
படம் வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் வீடியோ ஒன்றும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் சூர்யா உற்சாகமாகவும் அதே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் காணப்படுகிறார்.

சூர்யா மகிழ்ச்சி
இதையடுத்து படத்தின் நாயகன் சூர்யா மற்றும் நாயகி பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளராக இமான் உள்ள நிலையில் இந்த வீடியோவில் இசையமைப்பும் சிறப்பாக காணப்படுகிறது. விரைவில் படத்தின் பாடல்களையும் எதிர்பார்க்கலாம்.
Recommended Video

பொங்கல் ரிலீஸ் இல்லை
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் கொண்டாட்டமாக படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அஜித்தின் வலிமை படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படத்துடன் சூர்யா படம் மோதுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்த நிலையில், தற்போது பிப்ரவரியில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











