சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்... இன்று வெளியீடு!
சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை தயாரித்துள்ளது சன் பிக்சர்ஸ்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் சிறப்பாக காணப்படுகிறார் சூர்யா. ஜெய் பீம் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிகள்
நடிகர் சூர்யா, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

ரிலீசுக்கு தயார்
தற்போது படத்தின் டப்பிங் பணிகளில் சூர்யா விறுவிறுப்பாக பங்கேற்றுள்ளார். சூர்யாவின் நடிப்பில் இந்தப படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. இதில் தன்னுடைய ஊரில் நடக்கும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் ரிலீஸ்
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவில் நிறைவு செய்து கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் ரிலீசாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

இன்று புதிய அப்டேட்
இந்நிலையில் படத்தின் புதியதொரு அப்டேட்டை இன்று பகல் 12 மணியளவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இவை படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து சிறப்பான நடிப்பில் நல்ல வெற்றிப் படங்களை கொடுத்துவரும் சூர்யாவின் இந்தப் படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











