வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா.... ‘மாஸ்’
சென்னை: வெங்கட் பிரபு இயக்கி வரும் மாஸ் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார் நடிகர் சூர்யா.
அஞ்சான் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் மாஸ். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள்.
ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல பிரேம்ஜி அமரனும் படத்தில் இருக்கிறார்.

வித்தியாசமான கெட்டப்...
தற்போது மாஸ் படம் தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன் மூலம், இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுவது உறுதியாகியுள்ளது.

திகில் படம்...
இப்படம் திகில் கலந்த நகைச்சுவையைக் கதைக்களமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

கோடை ஸ்பெஷல்...
2015 கோடை ஸ்பெஷலாக மாஸ் படம் திரைக்கு வர உள்ளது. அஞ்சான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், மாஸ் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

எதிர்பார்ப்பு...
இந்நிலையில், வித்தியாசமான கெட்டப்புடன் சூர்யா இருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











