அப்பாவுக்கு வாழ்த்து சொல்ல விஜய் சேதுபதி மகனுக்கு வேறு பாட்டே கிடைக்கலயா? ஒரே ஆபாச வார்த்தைகள்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி கடந்த 16ஆம் தேதி தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் தொடங்கி, திரைத்துறையினர் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவரது பிறந்த நாளை முன்னிட்டு இவர் கமிட் ஆகி உள்ள ஸ்லம் டாக் என்ற படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், அவரது மகன் சூர்யா சேதுபதியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதாவது சூர்யா சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை விஜய் சேதுபதியின் புகைப்படங்கள், விஜய் சேதுபதியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, " ஹேப்பி பர்த் டே பா" என்று எழுதி உள்ளார். அதேநேரத்தில் இந்த புகைப்படங்களுக்கு அவர் செலக்ட் செய்துள்ள பாடல் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

Surya Sethupathi Selects Rap Song With Bad Words To Wish His Father Vijay Sethupathi Birthday Wish

விவகாரமான பாடல்: விஜய் சேதுபதி மகன் தனது அப்பாவுக்கு வாழ்த்து சொல்ல வைத்த பாடலை பலரும் கவனிக்க வில்லை. பெரும்பாலான ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து சொல்வதில் குறியாக இருந்தார்கள். அதிலும் பெண் ரசிகர்கள் சிலர் உங்க அப்பாவை பெண் கேட்டு வரலாமா என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் வெகு சில ரசிகர்கள் மட்டுமே சூர்யா சேதுபதி தேர்வு செய்து வைத்துள்ள பாடலை கவனித்து அவற்றை மென்ஷன் செய்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ராப் பாடல்: அதாவது சூர்யா சேதுபதி, 'Logic - Homicide' என்ற பாடலை தேர்வு செய்து வைத்துள்ளார். இதில் Logic என்பது பாடலைப் பாடிய ராப் பாடகரின் பெயர். Homicide என்பதுதான் பாடலின் பெயர். இந்த பாடலை, ft. Eminem என்ற ராப் பாடகரும் இணைந்து பாடியுள்ளார்கள். மிகவும் வேகமாக இருக்கும் இந்த பாடலைக் கவனித்தால் பாடலில் இருக்கும் ஆபாச வார்த்தைகள் புலப்படுகிறது. இதைக் கவனித்த ரசிகர்கள் சிலர், ஒருத்தரும் பாட்டை கவனிக்கவில்லை போல என்றும், தயவு செய்து பாடலை நீக்குங்கள் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த கமெண்ட்களை சூர்யா சேதுபதி கண்டுகொள்ளவேயில்லை என்பது போல, பாடலை மாற்றாமல் உள்ளார். மேலும் சிலர் அப்பாவுக்கு வாழ்த்து சொல்ல வேறு பாடலே கிடைக்கவில்லையாப்பா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Surya Sethupathi Selects Rap Song With Bad Words To Wish His Father Vijay Sethupathi Birthday Wish

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X