சன்ரைஸ் விளம்பரத்தில் பாடிய சூர்யா…
நடிகர் சூர்யா முதன் முறையாக விளம்பரம் ஒன்றில் பாடியிருக்கிறார்.
நான்கு வரிதான் என்றாலும் நன்றாக வந்திருக்கிறது என்று ரசித்து இதனை யு டியூப்பில் வெளியிட்டுள்ளார் பாடகர் கார்த்திக்.
அழகான சூர்யாவைப் போல குரலும் கனிவாக, கவர்ந்திழுக்கிறது என்கின்றனர் இந்த பாடலை கேட்ட ரசிகர்கள்.

விளம்பரத்தில்...
நடிகர் சூர்யா சன் ரைஸ் காபி விளம்பரத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறார்.

புதிய காட்சியமைப்பு
புதிய விளம்பரப்படம் ஒன்றை ராஜீவ்மேனன் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங், இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய், கார்த்திக்
இந்த விளம்பரத்திற்கு கவிஞர் பா.விஜய் பாடல் எழுத, இசையமைத்துள்ளார் பாடகர் கார்த்திக்.

சூர்யாவிற்கு ஆச்சர்யம்
டப்பிங் பேச வந்த சூர்யாவை பாடவேண்டும் என்று கார்த்திக், ராஜீவ் மேனன் ஆகியோர் கேட்டுக்கொள்ளவே வெட்கத்தோடு சம்மதித்தார் சூர்யா.

நல்லாயிருக்குப்பா...
ஒருவழியாக நான்கு வரி ஜிங்கில்ஸை பாடி அனைவரின் பாராட்டினையும் பெற்றுவிட்டார் சூர்யா. அதை யுடுயூப்பில் வெளியிட்டுள்ளனர்.

பாடகர்களாகும் நடிகர்கள்
தனுஷ், சிம்பு, ஏற்கனவே பாடி நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும், கார்த்தி பிரியாணி படத்திலும், முதன் முறையாக பாடியுள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் சூர்யாவும் இணைந்திருக்கிறார்.

சூர்யாவின் அடுத்த களம்
நடிகராக தன்னை நிரூபித்து விட்ட சூர்யா, அண்மையில் வெளியான 'சிங்கம்-2' படத்தை தன்னுடைய '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் வெளியிட்டு, தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார். இப்போது பாடகராகவும் களமிறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications