அடுத்தடுத்த வெற்றிகள்... சூட்டிங் இடைவெளியில் பிரபல கோயிலுக்கு விசிட் அடித்த சூர்யா!
சென்னை : நடிகர் சூர்யா ஜெய்பீம், சூரரைப் போற்று, எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா41 படத்தில் நடித்து வருகிறார். இதன்முதல் கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக கோவாவிற்கு டீம் செல்லவுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் வசூல்ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
இந்தப் படம் பாலியல் வன்முறைக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியானது. கமர்ஷியலாக படம் எடுக்கப்பட்ட நிலையிலும், அதில் சமூக அக்கறையை கொண்டு வந்திருந்தார் பாண்டிராஜ். இந்தப் படமும் சூர்யாவிற்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

சூர்யா41 படத்தின் முதல்கட்ட சூட்டிங்
நந்தா, பிதாமகன் வெற்றிப் படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் முதல்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் தொடர்ந்து 34 நாட்கள் எடுக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு முடிந்துள்ளது.

அடுத்த மாதத்தில் 2வது கட்ட சூட்டிங்
படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் கோவாவில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு கேப் விடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட்கள் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம்
இதற்கென படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் பிரபல காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு நெற்றியில் குங்குமத்துடன் காணப்படுகிறார் சூர்யா. ஆனால் கோயிலுக்கு அவர் தனியாகவே வந்துள்ளார்.
Recommended Video

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்
இந்த திடீர் விசிட்டிற்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. தனது படங்களின் அடுத்தடுத்த வெற்றிகளை அடுத்து கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சூர்யா வந்தாரா அல்லது தனது அடுத்தடுத்த தயாரிப்புகளான சூர்யா41 மற்றும் சூரரைப் போற்று இந்தி ரீமேக் உள்ளிட்ட படங்களின் வெற்றிக்காக வந்தாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











