தல தளபதியை ஒரங்கட்டுவாரா சூர்யா.. ரெட்ரோ முன்பதிவு சுட சுட ஆரம்பம்.. ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், பூஜா ஹெக்டே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கனிமா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார். பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ரசிகர்கள் ரெட்ரோ படத்தை திரையரங்கில் காண இன்றே தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லியை தாண்டுமா என்பது ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ரெட்ரோ என்பது கடந்த காலத்தை குறிக்கும் சொல் என இயக்குநர் விளக்கம் அளித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், கண்ணாடி பூக்கள், கனிமா பாடலும் பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது. அரபிக்குத்து பாடலுக்கு பிறகு கனிமா பாடல் மூலம் பூஜா ஹெக்டே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோ வசூல் சாதனை படைக்குமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

கங்குவா தோல்வி: கடந்தாண்டு இறுதியில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. சூர்யா படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் இதுதான் என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதனால், ரெட்ரோ படத்தை சூர்யாவை போன்று அவரது ரசிகர்களும் பெரிய அளவில் நம்பியுள்ளனர். ரெட்ரோ படத்திற்காக சூர்யாவின் கெட்டப்புகள் அசர வைக்கின்றன. சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க காதல் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரெட்ரோ படம் குறித்து பேசிய கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தில் முதலில் ரஜினிக்காக தயார் செய்த கதை என்றும் தலைவருக்காக நிறைய மாத்தினேன் என்றும் தெரிவித்திருந்தார். ரஜினிக்காக எழுதிய கதையில் தான் சூர்யா நடிப்பது தெரியவந்தது. அப்போது இதற்காக சூர்யா கண்டிப்பாக மெனக்கெட்டிருப்பார்.
முன்பதிவு: ரெட்ரோ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்று மாலை முதல் இப்படத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. சினிமா ரசிகர்கள் படத்தை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். கங்குவா படத்தை தாண்டி ரெட்ரோ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோட், குட் பேட் அக்லி படத்தின் சாதனையை தாண்டி ரெட்ரோ புதிய ரெக்கார்டு படைக்குமா என்பதே சினிமா விநியோகஸ்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ரெட்ரோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லியை தாண்டுமா?: அஜித்தை போன்று இல்லாமல் சூர்யாவிற்கு தமிழை போன்று தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமாவில் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இவர் படத்தை பார்க்க பிறமொழி ரசிகர்களும் ஆர்வம் காட்டுவார்கள். கங்குவா படத்தில் சத்தம் அதிகம் இருந்ததாக கூறினாலும் இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடியதை மறக்க முடியாது. எனவே சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் படத்தின் சாதனையை முறியடிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ஆனால், விஜய், அஜித்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சூர்யா ஸ்டார் நடிகராக திகழ்கிறார். எனவே ரெட்ரோ திரைப்படம் குறைந்தது 300 கோடியை தொடும் என விநியோஸ்தர்களின் கணிப்பாக இருக்கிறது. குட் பேட் அக்லியை மிஞ்ச வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல் நாள் வசூலிலல் கங்குவாவை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











