எல்லாம் வேற லெவலில் இருக்கு.. மாஸாக வெளியான ரெட்ரோ படத்தின் தி ஒன் பாடல்.. கம்பேக் கொடுத்த சிங்கர்
சென்னை: சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் 3வது சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதுவரை பார்க்காத ஒரு சூர்யாவை இந்த பாடலில் பார்க்கலாம். உலகத்தரத்தில் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை உருவாக்கியிருக்கார். கண்ணாடி பூக்கள், கனிமா பாடல்களை தாண்டி தி ஒன் பாடல் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்பாடலுக்கு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இதில் காணலாம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத ஊமை பெண்ணாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் படங்கள் எப்போதும் மதுரையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். கேங்ஸ்டர் வாழ்க்கை, காதல், ரவுடி ரிவெஞ்ச் என்ற வழக்கமான மசாலா காம்பினேஷனில் இருக்கும். கதை வித்தியாசமான உணர்வை தரும். அதேபோன்று நடிகர்களின் கெட்டப்புகளும் மாறுபட்டு காணப்படும். சூர்யாவின் 44 வது படமாக இருக்கும் ரெட்ரோ மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

கண்ணாடி பூக்கள்: ரெட்ரோ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் குறித்து பேசிய கார்த்திக் சுப்பராஜ், இப்படத்தை எல்லோரும் என்னுடயை ஸ்டைலில் உருவான கேங்ஸ்டர் படம் என பேசி வருகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்க காதல் படமாக இருக்கும். தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக ரெட்ரோவை கொண்டாடுவார்கள் என தெரிவித்தார். அவர் கூறியது போன்றே ரெட்ரோ படத்தை காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். படத்தில் இடம்பிடித்த கண்ணாடி பூக்கள் பாடல் காதல் மெலோடியாக ரசிகர்களை வசப்படுத்தியிருக்கிறது. இதில் சந்தோஷ் நாராயணன் மேஜிக் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். லேசாக இதையத்தை வருடும் பாடலாகவும் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தனர். கண்ணாடி பூக்கள் இதையத்தை கிழித்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
ஆல் டைம் ஃபேவரட் கனிமா: மதுரை பகுதிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் திருவிழா போலத்தான் கொண்டாடுவார்கள். கல்யாணமாக இருந்தாலும் சரி இழவு வீடாக இருந்தாலும் சரி அது ஒரு திருவிழா நிகழ்வை போன்று கலைகட்டும். அதே பாணியில் தான் கார்த்திக் சுப்பராஜூம் தனது படங்களில் ஒரு பாடலை கண்டிப்பாக வைத்து விடுகிறார். ஜகமே தந்திரம் படத்தில் எனக்கு ராஜாவா நான் வாழுறேன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மா மதுரை அன்னக்கொடி, அதைத்தொடர்ந்து தற்போது வெளியான கனிமா என அனைவருக்கும் பிடித்த ஆல்டைம் ஃபேவரட் பாடலாக கனிமா வலம் வந்துகொண்டிருக்கிறது. ஒரு திருமண நிகழ்ச்சியில் இப்படியொரு கொண்டாட்ட நிகழ்வாக கார்த்திக் சுப்பராஜ் மாத்திவிட்டார்.

பூஜா ஹெக்டே நடனம்: கனிமா பாடலை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதள பக்கங்களை திறந்தால் இந்த பாடல்கள் தான் அதிகம் ரீல்ஸ் வீடியோக்களாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகளால் திரை பிரபலங்களே அசந்து போய்விட்டனர். அவரை போன்ற நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை தட்டி விடுகின்றனர். இப்பாடல் உலகளவில் ரீச் ஆகியிருக்கிறது. ஆனாலும் கனிமா பீவர் குறையவில்லை. இப்பாடலை கொண்டாடி வரும் நிலையில், ரெட்ரோ படத்தில் அடுத்த பாடல் வெளியாகியிருக்கிறது, தீ பற்றி கொள்ளும் அளவிற்கு அசர வைத்திருக்கிறது பாடலின் மேக்கிங்.
தி ஒன் பாடல்: ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் உருவான கனிமா, கண்ணாடி பூக்கள் இணையத்த கலங்கடித்து விட்டன. தற்போது வெளியாகியிருக்கும் தி ஒன் பாடல் உகலத்தரத்தில் உருவாகியிருக்கிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தி ஒன் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வேற ரகத்தில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். உலகத்தரத்தில் உருவாகியிருக்கும் ஆல்பம் பாடலுக்கான அனைத்து தர மதிப்பீடுகளிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரெட்ரோ படத்தில் சூர்யாவின் கெட்டப்பும் அசத்துவதை போன்று பாடல்களும் ஹிட் அடித்து வருகின்றன.

வெற்றி கூட்டணி: கார்த்திக் சுப்பராஜ் - சந்தோஷ் நாராயணன் காம்போவில் உருவாகும் படங்கள் ரசிகர்களின் பேரன்பை பெற்றிருக்கிறது. ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ வரை இவர்களது சினிமா பயணம் தொடர்கிறது, இருவரது கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு என்று திரையுலகில் தனி மதிப்பீடு இருக்கிறது. தி ஒன் பாடல் வெளியிடுவதற்கு முன்பு சந்தோஷ் நாராயணன் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் பாடல் வெளியாக தாமதமாகுமா என கார்த்திக் சுப்பராஜ் ஜாலியாக ட்வீட் செ்யதார். அதற்கு பதில் அளித்த சந்தோஷ் மாமே பாட்டு வெளியாகும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

தி ஒன் பாடல் எப்படி இருக்கு?: இன்று வெளியான தி ஒன் பாடல் மாஸாக பட்டைய கிளப்புவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சித் ஸ்ரீராம் ரீ எண்ட்ரியை எதிர்பார்க்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். தி ஒன் பாடல் ரெட்ரோ படத்தின் மொத்த கதையையும் சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளனர். சூர்யா பூஜா ஹெக்டேவிற்காக இப்படிி உருகுகிறார். ரெட்ரோ கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க சூர்யா படம் தான் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
தலைவன் உருவாகிறான்: நாடி நரம்பெல்லாம் புடைக்கும் அளவிற்கு தி ஒன் பாடல் உருவாகியிருப்பது தெரிகிறது. சனாவின் இசையில் சித் ஸ்ரீராம் பாடியிருப்பது ரொம்ப ஸ்பெஷல் என்றும் தெரிவிக்கின்றனர். பாடலில் வரிகளை உற்று கவனித்தால் ஒரு தலைவனை தேடி ஒரு கூட்டமே அலைகிறது. ஆனால், தலைவனின் மனம் காதலியை காண முடியாமல் தவிப்பதை உணர முடிகிறது. ரெட்ரோ படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் ஒரு பாட்டிலேயே இத்தனை வெரைட்டி காட்டியுள்ளார். படத்தில் சூர்யா எப்படி இருப்பார் என்ற கனவு உலகிற்குள் அவரது ரசிகர்கள் சென்றுள்ளனர்.
ரெட்ரோ ரிலீஸ் எப்போது?: கங்குவா படத்தின் தோல்வியால் துவண்டு போன ரசிகர்களுக்கு ரெட்ரோ படம் புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. இப்படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் காண அவரது ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் அதற்கான பணியில் இறங்கியுள்ளார். சூர்யா பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











